பக்கம்:சிலம்பின் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

சிலம்பின் கதை



அவன் ஒரே செல்வமகள் கண்ணகி என்பாள்: அவளுக்கு வயது பன்னிரண்டு ஆகியது. அவள் கண்கவரும் பேரழகு உடையவள்; அதனால் அவளை, “ஈகைவான் கொடி யன்னாள்” என்று சிறப்பித்துப் பேசினர். “வானத்து மின்னல்” என அவள் புகழப்பட்டாள்.

மற்றும் அவள் பேரழகு காண்பவரைக் கவர்ந்தது. திருமகள் வடிவு இவள் வடிவு என்று பேசினர்; இவள் கற்பின் திறம் பாராட்டப்பட்டது. வடமீன் ஆகிய அருந்ததி அனையவள் என்று அவ் ஊர் மகளிர் அவளைப் பாராட்டினர்.

மாசாத்துவான்

அதே ஊரில் செல்வச் சிறப்பும், உயர்மதிப்பும் பெற்ற வணிகன் மற்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மாசாத்துவான் என்பது ஆகும். அவன் அரசனும் மதிக்கத்தக்க குடிமகன் என்று பாராட்டப்பட்டான். மாநாய்கனைப் போலவே வறியவர்க்கு வழங்குவதில் மிக்க புகழ் பெற்றிருந்தான். அவனுக்கும் ஒரே மகன் கோவலன் என்பான்; வயது பதினாறு ஆகியது. அவன் நற்குணத்தை அனைவரும் பாராட்டிப் பேசினர். அவன் அழகில் முருகன் என்று நங்கையர் மதித்துப் பாராட்டினர். அவனை “மண்தேய்த்த புகழினான்” என்று இளங்கோ அறிமுகம் செய்கின்றார். உலகு எங்கும் அவன் புகழ் பேசப்பட்டது.

மண நிகழ்ச்சி

இரு குடியினரும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்; வணிகப் பெருமக்கள். இவர்கள் தம் மக்களுக்கு மணம் முடிக்கக் கருதினர். கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் செய்விப்பதில் ஆர்வம் கொண்டனர். நாள் குறித்துச் செய்தியை நகரத்துக்கு அறிவித்தனர். அவர்கள் செல்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/11&oldid=958901" இலிருந்து மீள்விக்கப்பட்டது