பக்கம்:சிலம்பின் கதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொலைக்களக் காதை

111



“நினைத்ததைச் சாதிப்பதில் அவர்கள் நிலைபேறு உடையவர்கள் ஆவர். அவர்கள் புகாத இடமே இல்லை. காற்று நுழையாத இடமாயினும் அவர்கள் புகுந்து ஆற்றுவர். துாதர் கோலத்தில் வாயிலின் நுழைந்தான் ஒருவன், மாதர் கோலத்தில் அவன் உள்ளே சென்றான். விளக்கு ஒளியில் இருட்டு நேரத்தில் இளவரசனின் கழுத்துச் சங்கிலி வயிரம் பதித்தது; மின்னலைப்போல் பறித்தான்; மறைந்தான்”.

“வாள் கொண்டு இளவரசன் வீசினான். ஆள் அவனுக்கு அகப்படவில்லை. தோள் கொண்டு அவனைப் பற்ற முயன்றான். தூண் ஒன்றைக் காட்டிவிட்டுச் சேண்துரம் சென்றான். களவு நூல் கற்று உளவு அறிந்து திருடிய அவனை இதுவரை யாரும் கண்டு பிடிக்கவே இல்லை. அவன் இடத்தை யாராவது காட்ட முடியுமா என்று பழைய நிகழ்ச்சி ஒன்றைக் கூறி அவர்கள் பிழைகளை எடுத்துக் காட்டினான். அவன் கூறியதை ஒட்டி மற்றொருவன் தன் சொந்த அனுபவத்தைக் கூறி உயிரோட்டம் தந்தான். “அவன் வயது குறைந்த இளைஞன், வேல் தாங்கி இருந்தான். நிலம் தோண்டும் உளி வைத்திருந்தான். நீலநிற உடை உடுத்தி இருந்தான். நகைகளைக் கவரும் வேட்கையில் கடும்புலிபோல் நடு இரவில் ஊரவர் துயின்று கொண்டிருந்த நேரத்தில் வந்திருந்தான். என் கைவாள் எடுத்தேன். அவன் அதைத் தடுத்துப் பற்றிக்கொண்டான். அடுத்து அவனைத் தேடினேன். எங்கும் அவன் எனக்கு அகப்படவே இல்லை. இவர்கள் செயல் அற்புதமானது, அறிய இயலாதது” என்று மிகைப்படுத்திக் கூறினான்.

“இவன் தப்பித்துச் சென்றால் நம் உயிர் தப்புவது அரிது; அரசன் நம்மை மன்னிக்கமாட்டான்; அவனா நாமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/112&oldid=936429" இலிருந்து மீள்விக்கப்பட்டது