பக்கம்:சிலம்பின் கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவை

113



நாவலந் தீவு தமிழக மன்னர்க்கு அடிபணிந்தது. பாண்டியன் அரண்மனையில் காலை முரசு ஒலித்தது. பொழுது விடிகிறது என்பதை அறிவித்தது. அன்று மாதரி மன்னவன் கோயிலுக்கு நெய்ம் முறை செய்யும் நாள்: அவள் நெய் கொண்டு சென்று தரவேண்டிய முறை வந்தது. அதனால் மாதரி ஐயையை அழைத்து மத்தும் கயிறும் கொண்டு வரச் சொன்னாள். அவற்றை எடுத்துக் கொண்டு தாழியினிடத்துச் சென்றாள்.

தீய நிமித்தங்கள்

குடத்தில் பால் உறைந்து கிடக்கும் என்று எதிர் பார்த்தாள். அது தயிராக வில்லை; உறையாகவேஇல்லை; எருது கண்ணிர் சொரிந்தது.

வெண்ணெயைக் காய்ச்ச முற்பட்டாள்; அது உருகவே இல்லை; உறைந்து கிடந்தது; ஆட்டுக்குட்டி வழக்கமாகத் துள்ளி விளையாடும்; அது அசையாமல் பள்ளி கொண்டிருந்தது.

பசுவோ என்றால் அது நடுக்கம் காட்டியது. எதற்கோ அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தது; அதன் கழுத்து மணி அறுந்து தானே கீழே விழுந்தது.

இவை தீய நிமித்தங்கள், ஏதோ தீமை வர இருக்கிறது என்பதை உணர்ந்தனர். அதைப் போக்க வழி யாது? அதற்கு ஒரே வழி தெய்வத்தை வழிபடுவது; ஆய மகளிர் கூடித் தெய்வத்தைப் பாடுவது; குரவைக் கூத்து ஆடுவது என்று முடிவு செய்தனர். கண்ணகியை அழைத்துக் கொண்டு அவள் காண ஆடுவது தக்கது என்றனர். கண்ணன் தன் முன்னவனாகிய பலராமனுடன் ஆயர் பாடியில் ஆடிய வாலசரிதை என்னும் கதையில் ஒரு பகுதி, நப்பின்னையோடு கண்ணன் ஆடியது, அதில் ஆய மகளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/114&oldid=936431" இலிருந்து மீள்விக்கப்பட்டது