பக்கம்:சிலம்பின் கதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20. வழக்கு உரைத்தல்
(வழக்குரை காதை)

கோப்பெருந்தேவி கனவு

கோப்பெருந்தேவி தீக்கனா ஒன்று கண்டாள்; அதை அவள் தன் தோழிக்கு எடுத்து உரைத்தாள்: “அரசனின் செங்கோல் அதனோடு அவன் வெண்கொற்றக்குடை இவை சாய்கின்றன; வாயில் கடையில் வைக்கப்பட்டிருந்த மணி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது; திசைகள் எட்டும் அசைவுகள் ஏற்பட்டு அதிர்கின்றன; சூரியனை இருள் விழுங்குகிறது; வானவில் இரவில் தோன்றுகிறது; பகலில் நட்சத்திரங்கள் கொள்ளிக்கட்டைகள் போல நெருப்பை அள்ளி வீசுகின்றன”.

இவற்றை எடுத்துக்கூறி “அடுத்து என்ன நடக்குமோ” என்று அரசி அஞ்சினாள். “இதனை மன்னவனுக்கு அறிவிப்போம்” என்று கூறினாள். தன்னை அந்தப்புரத்துப் பரிவாரப் பணிப்பெண்கள் சூழ்ந்துவர அரசி மன்னன் அவையை அணுகினாள். “அரசி கோப்பெருந் தேவி வாழ்க” என அறிவித்த வண்ணம் ஆயத்தவர் அரசி யோடு அரசனை அணுகினர். பாண்டிமாதேவி அரசனுக்குத் தான் கண்ட தீக்கனவை எடுத்து உரைத்தாள். அரசன் அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அரியாசனத்தில் அமர்ந்திருந்தான்.

வாயிலோனை விளித்தல்

வெளியே கடுமையான குரலில் கண்ணகி வாயிற் காவலனை விளித்துக் கூறினாள்; “வாயில் காப்பவனே! அறிவிழந்து நெறிதவறிய அரசனின் காவலன் நீ! நீ சென்று அறிவிப்பாயாக! கையில் ஒற்றைச் சிலம்பை ஏந்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/125&oldid=936442" இலிருந்து மீள்விக்கப்பட்டது