பக்கம்:சிலம்பின் கதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சின மாலை

129


 உள்ளது; தீரச் செயலுக்கு அவள் பெயர் எடுத்த வீர மங்கையாவாள்”.

“வேற்று ஆள் ஒருவன் ஒருத்தியின் பேரழகைக் கண்டு இடம் பெயராமல் நின்றான். அவள் தன்முகத்தைக் குரங்கு முகமாகுக எனக் கூறி ஆடவர் நெஞ்சில் இடம் பெறுவதை அறவே தவிர்த்தாள். தன் கணவன் வந்ததும் தன் திரிந்தமுகத்தை மாற்றிச் சிரித்த முகத்தள் ஆயினாள். பழைய நிலையில் தன்னை அவள் மாற்றிக்கொண்டு சீர் பெற்றாள். அவள் கீர்த்தி இன்றும் பேசப்படுகிறது.”

“பழங்கதை இது, வண்டல் அயர்ந்து விளையாடிய சிறுமியர்கள் அவர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார் கள் ஒருத்தி சொன்னாள்,” எனக்கு ஒரு மகள் பிறந்து உனக்கும் ஒரு மகன் பிறந்து இருவரும் பெரியவர்கள் ஆவார் எனின் அவனுக்கு என் மகள் வாழ்க்கைப்படுவாள்” என்று சொல்லி விட்டாள். காலம் சென்றது; தன் மகள் மணப்பருவம் அடைந்தாள். அவளைத் தான் கூறியபடி தன் தோழியின் மகனுக்குத் தரவேண்டும் ஏற்றத் தாழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டன. இதை எப்படித் தன் கணவனிடம் கூறுவது? தயங்கித் தயங்கி இதனைத் தன் கணவ்னிடம் கூறினாள். அதைக் கேட்டாள் அந்த மகள்: உடனே கூறை உடுத்து மணப்பெண்கோலம் ஏற்று அந்த வீட்டு மகன் முன் மணப்பெண்ணாக நின்றாள். அவன்தான் தன் கணவன் என்று உறுதியாக நின்றாள். ஒருமுறை ஒருவனைக் கணவனாக வரித்தது என்றால் அதனை மாற்றாது உறுதியாக அவள் நடந்து கொண்டாள்; இந்தக் கதை எம் நகரத்தில் காலம் காலமாகப் பேசப்படுகிறது”.

இவ் எழுவர்தம் கதைகளையும் எழில் உற எடுத்துக் கூறி இத்தகைய கற்புடைய பெண்கள் பிறந்த நகரில் தான் பிறந்ததாகவும், தானும் அவர்கள் வழிவந்த கற்புடைய மாது என்றும் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/130&oldid=936449" இலிருந்து மீள்விக்கப்பட்டது