பக்கம்:சிலம்பின் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனை அறம் படுத்த காதை

13



கூற முடியும். இன்பத்தின் எல்லையை முதற் சந்திப்பிலேயே கண்டான். கண்ணகியை நேசித்தான்.

செல்வக் குடும்பத்தில் பிறந்தவன்; அதனால் எழு நிலை மாடத்தில் அவன் முதல் இரவு தொடங்கியது. இடைநிலை மாடத்தில் இருவரும் இருந்தனர்; அமர்ந்த காட்சி அதில் இன்பவாழ்வு தொடங்கினர்; நெருங்கினர்; கிளர்ச்சிகள் பின்பு அவர்களைத் தொடர்ந்தன.

தென்றல் காற்றுச் சாளரம் வழியாக உள்ளே நுழைந்தது. அது பல்வகை மலர்களின் வாசத்தை அள்ளிக் கொணர்ந்தது. வாசமும் குளிர்ச்சியும் மிக்க தென்றல் அவர்களைத் தூண்டியது; காதல் உணர்வைப் பெருக்கியது.

தென்றலின் சுகம் அவர்களை நிலா வெளிச்சத்தைத் தேடத் தூண்டியது. நிலவு ஒளியில் அவர்கள் கலவி இன்பத்தைக் காண விழைவு கொண்டனர். நிலாமுற்றம் ஏழாவது மாடத்தில் இருந்தது. அதனைத் தேடி அங்குப் பூக்கள் பரப்பிய படுக்கையில் அவர்கள் இன்பக் கேளிக்கைகளைத் தொடுத்தனர்.

அவள் மார்பிலும், தோளிலும் வண்ண ஓவியங்கள் தீட்டினான். 'கரும்பும் வல்லியும்' காம இச்சையைத் தூண்டும் சித்திரங்கள்; அவற்றைச் செம்பஞ்சுக் குழம்பில் தீட்டி அவள் மேனியைத் தொட்டான்; அவள் அழகினைக் கண்டான்; இன்பக் களிப்பின் ஆரம்ப அகராதி அது.

சுட்டும் விழிகள் சூரிய சந்திரரோ என்று பாடினான் பாரதி; அவள் வட்டக் கரு விழிகள் வானக் கருமுகிலோ என்றான். இங்கே அவர்கள் இருவரும் சூரிய சந்திரகளாக ஒரே இடத்தில் அமர்ந்து புத்தொளி ஊட்டினர். சூடும் குளிர்ச்சியும் அவர்களிடத்தில் இடம் பெற்றன. விலகி இருக்கும்போது வெப்பத்தையும், அருகில் வரும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/14&oldid=958924" இலிருந்து மீள்விக்கப்பட்டது