பக்கம்:சிலம்பின் கதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்றக் குரவை

143



அகப் பொருள் துறை அமைய அவர்கள் பாடத் தொடங்கினர்.

“தலைவன் தந்த நோய் இதை அறியாத தாய் பூசாரியைக் கொண்டு வெறியாட்டு நடத்துகிறாள். இது நகைக்கத் தக்கது ஆகும். கோயில் பூசை செய்யும் பூசாரி வருவானாம். அவன் வழிபாடு செய்ய முருகன் வரு வானாம். அவன் நம் நோயைத் தீர்ப்பானாம். இது மடமையன்றோ! அப்படி வந்தால் அந்த முருகன் ஒன்றும் அறியாதவனே ஆவான். எல்லாம் விளையாட்டாக முடியும். சிரிப்புத்தான் வருகிறது சிந்தித்துப் பார்த்தால்” என்றனர்.

“வேலைத் தாங்கிய வேலவன் ஆகிய முருகன் வந்தால் எம் குறமகள் தான் விரும்பிய காதலனை மணக்க அருள் செய்க என்று வேண்டுவோம். அவள் விரும்பும் தலைவனையே அவள் மணக்க அருள் செய்க! மாறுபட்டு அயலவனைக் கொண்டு வந்து நிறுத்துவர்; அதனைத் தவிர்க்க! என்றும் வேண்டுவோம்” என்றனர்.

“அவர்கள் பாடலைக் கேட்டு அவ்வழியே மலை நாடனாகிய தலைவன் வந்தான் எனவும் அவனைச் சந்தித்து அவன் திருவடியைத் தொழுது வணங்கித் தலைவி இவ்வாறு கூறத் தொடங்கினாள்” எனவும் பாடினர்.

“கடம்பைப் பூச்சூடிக் கொண்டு கையில் வேல் ஏந்தி இவலுரில் நீ வந்தாலும் உன்னை இவ்வூரார் முருகன் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். உனக்கு ஆறுமுகங்கள் இல்லை; ஏறிவர மயில் இல்லை; பக்கத்திலே வள்ளி இல்லை; தோள்கள் பன்னிரண்டு இல்லை; அதனால் உன்னை முருகன் என்று கருதமாட்டார்கள். நீ தலைவி யைத் தேடி வந்த தலைவன் என்று எளிதில் அறிந்து கொள்வர். அதனால் ஊரில் அலர்தான் எழும்; மலர்த்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/144&oldid=936464" இலிருந்து மீள்விக்கப்பட்டது