பக்கம்:சிலம்பின் கதை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிக் காதை

147



தேடிச் சென்றது போல இருந்தது. வெற்றி வேந்தன் பாண்டியன் அவன் கொற்றம் இத்தகையது என்று சாற்றுவதற்கு வந்தவள்போல் நின்னாட்டு அகம் இவள் வந்து சேர்ந்தாள். தன் நாட்டுக்கு அவள் சென்றிலள் வாழ்க நின் கொற்றம்” என்று அவர் விளக்கம் தந்தார்.

சேரன் கருத்துரை

தென்னவன் அரசன் அவன்தன் பழி மிக்க வாழ் வினைக் கேட்ட சேர மன்னன், “செம்மை நீங்கிய சொற்கள் எம்மைப் போன்ற அரசர்கள் செவியில் விழுந்து வெம்மை ஊட்டாமல் இருக்கப் பாண்டியன் தன் உயிர்விட்டான் என்று நினைக்கவும் தோன்றுகிறது. வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கிவிட்டது,” என்று கூறினான். மற்றும் அரசர்க்கு உள்ள துன்பங்கள் இவை. என்று வரிசைப்படுத்திக் கூறி னான்.

“மழை பொய்த்துவிட்டால் அது மிகப்பெரிய கவலையைத் தருகிறது; அதுபேரச்சத்தை உண்டாக்கு கிறது. நாட்டு மக்கள் தவறு இழைத்தால் அது மன்னனைத் தாக்குகிறது; அவ்வாறு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சம் எப்பொழுதும் நச்சரிக்கிறது. மக்களைக் காக்கும் அரச குடியில் பிறத்தல் துன்பம்தான் அன்றி மதிக்கத் தக்கது அல்ல; பாராட்டித் தொழத் தக்கதும் அல்ல.” இவ்வாறு சாத்தனார்க்குச் சேரன் தன் கருத்துகளைக் கூறினான்.

பின்பு தன் மனைவியை நோக்கி, “உயிர்விட்டுப் புகழ்பெற்ற ஒருமகள் பாண்டியன் மனைவி ஆவாள்; உயிருடன் இங்கு வந்து வழக்கினை உலகறியச் செய்ய வந்திருக்கிறாள் மற்று ஒரு மகள்; அவள் இந்நாடு அடைந்திருக்கிறாள். இவ்விருவருள் வியக்கும் நலத்தை உடையவர் யார்?” என்று வினவினான்; இருவரில் யார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/148&oldid=936468" இலிருந்து மீள்விக்கப்பட்டது