பக்கம்:சிலம்பின் கதை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிக் காதை

151



“விற்பொறி பதித்த இமயத்தில் கற்கொண்டு வர எம் காவலன் கருதிட்டான். அவனை எதிர்த்துப் போரிட்டால் அதன் விளைவினைத் தாங்க நேரிடும்; திறை தந்து இறையைப் பணியீர் ஆயின் அவன் வெற்றி விளைவு களைச் சிந்திப்பீராக; அவன் கடலில் சென்று கடம்பு எறிந்த வெற்றி, இமயத்தில் வில் பொறித்த வெற்றி இவற்றைக் கேட்டிருப்பீர் நீர் அடங்கி எதிர் கொண்டு வரவேற்று உதவுவீர் என்றால் உயிர் பிழைப்பீர் எதிர்த்தால் உயிருக்கு அஞ்சித் துறவு கொண்டு ஒடநேரிடும்” என்று செய்தி தெரிவித்தனர்; “வாள் கண்டு வணங்கினால் வாழ முடியும்; இல்லை என்றால் தோள் துணை மறந்து துறவு கொள்ள நேரிடும்” என்று அறிவித்தனர். “அரசன் வாழ்க” என்று யானை மீது இருந்து முரசு அறைவித்தனர்.


26. கல்லைக் கொணர்தல்
(கால்கோள் காதை)

பறை அறைந்தனர்; சிம்மாசனத்தில் செங்குட்டுவன் ஏறி அமர்ந்தனன்; ஆசான்; நிமித்திகன்; அமைச்சர்; படைத்தலைவர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் சேர்ந்து 'மன்னர் மன்னன் வாழ்க' என்று ஏத்தினர்; அரசன் கூறுவதை முன்னிருந்து கேட்டனர்.

படைத் தலைவரை விளித்து வீரமொழி பேசினான்: “இமயத்திலிருந்து வந்த தவசிகள் எமக்கு ஈங்கு உணர்த்திய அவச்சொல் கேட்டு அடங்கிவிட்டால் சோழரும் பாண்டி யரும் என்னை இகழவும் கூடும்; பழிச்சொல் நிலைத்து நிற்கும்; அதைப் போக்க வடக்கே சென்று கல்லை அங்கு ஆரிய அரசர்கள் தலைமீது சுமத்திக் கொண்டு வராமல் என் வாள் வறிது மீளும் என்றால் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை நடுங்க வைக்காமல் குடிமக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/152&oldid=936472" இலிருந்து மீள்விக்கப்பட்டது