பக்கம்:சிலம்பின் கதை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

சிலம்பின் கதை



நீலகிரியில் சேர மன்னன்

படை இயங்கு அரவம் விண்ணையும் முட்டியது; அதனைக் கண்டு வானத்து முனிவர்கள் விசும்பினின்று இறங்கி வந்து இவனைக் காண விழைந்தனர். மின்னல் ஒளிபோல் அவர்கள் காட்சி அளித்தனர். அவர்களை வணங்கி வேண்டுவது யாது என்று கேட்டனன். அவர்கள் “யாம் பொதிகை மலை செல்கின்றோம்; வழியில் உன்னைக் காணும் வாய்ப்பு நேர்ந்தது; நீ இமயம் ஏகுகின்றாய் என்பதை அறிகிறோம். அங்கே மறைகற்ற அந்தணர் உள்ளனர்; அவர்களுக்கு எந்தக் குறையும் நேராமல் காப்பது நின் கடமை” என்று கூறினர்; அவனை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

அதன் பின் கொங்கணக் கூத்தரும், கருநாடகக் கலைஞர்களும் தத்தம் துணைவியருடன் வந்து இருந்து பாடல் பாடினர். “வேனில் காலம் வந்தது; ஆனால் காதலன் வந்திலன்” என்ற கருத்துடைய பாடல்களைப் பாடினர். மற்றும் “கார்காலம் வந்தது. காதலன் தேரும் வந்தது; மகளிர் கோலம் கொள்க” என்றும் குடகர்கள் கார்க்குரவை என்னும் வரிப்பாடலைப் பாடினர்; “வாள்வினை முடித்து வெற்றியுடன் வருக” என்று ஒவர் எனப்பட்டவர் வாழ்த் தினர். அவர்களுக்கு மிக்க பரிசிலை நல்கினான். அதன்பின் சஞ்சயன் என்பான் நாடக மகளிருடனும், ஏனைய இசைக் கலைஞருடனும் அரசனைக் காண அங்கு வந்து சேர்ந்தான். அச்செய்தியை அறிவித்தனர். “அவனை வரவிடுக” என்று கூறி அழைப்பித்தான்.

சஞ்சயன் வருகை

சஞ்சயன் என்பவன் நூற்றுவர் கன்னர் அனுப்பிய தூதுவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடன் தான் அழைத்து வந்த நாடகக் கலைஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/155&oldid=936475" இலிருந்து மீள்விக்கப்பட்டது