பக்கம்:சிலம்பின் கதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்கோள் காதை

155


களையும், இசை வல்லுநரையும், ஆடல் மகளிரையும் அறிமுகம் செய்து வைத்தான். பின்பு நூற்றுவர் கன்னர் சொல்லி அனுப்பிய செய்தியை முறைப்படி கூறினான். கடவுள் எழுத ஒரு கல் கொணரச் செல்வது ஆயின் அதனைத் தன் தலைவர்களாகிய நூற்றுவர் கன்னரே செய்து முடிப்பர் என்று அவர்கள் சொல்லி அனுப்பியதாகத் தெரிவித்தான்.

“தான் வடநாடு செல்வது கல்லைக் கொணர்வதற்கு மட்டுமன்று; கடுஞ் சொல்லைக் கூறிய கனகனையும் விசயனையும் களத்தில் சந்திப்பதற்கே” என்று கூறினான். பாலகுமரன் என்பானின் மக்கள் கனகன், விசயன் என்பார் இருவர் தம் நாவைக் காவாதவராகித் தமிழர்களின் ஆற்றலைக் குறைவுபடுத்திப் பேசினர். விருந்தினர் மத்தியில் இழிவுடன் பேசித் தம் வீரத்தை மிகைப்படுத்திக் கூறினர். “இமயத்தில் தமிழரசர்கள் புலியையும், கயலையும் பொறித்த நாட்களில் தாம் அங்கு இல்லை” என்றும், “இருந்திருந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்” என்றும் நா காக்காமல் நகையாடிப் பேசினர். இச்செய்தியைச் சேரன் எடுத்துச் சொல்லி அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கவே தான் செல்வதாகக் கூறினான்.

கங்கையைக் கடக்க வங்கங்கள் தேவை என்ற செய்தியைச் செப்பி அனுப்பினான். கன்னரைக் கொண்டு படகுகளை அனுப்பச் சொல்லி அறிவிப்புச் செய்தான். அரசன் இட்ட ஆணையைத் தாங்கி நூற்றுவர் கன்னரிடம் அதை நுவலச் சஞ்சயன் சென்றான்; அதன்பின் தென்னவர் இட்ட திறை என்று சொல்லிச் சந்தனக் குப்பையும், முத்துக் குவியலும் சட்டை அணிந்த நாவன்மை படைத்தவர் ஆயிரவர் கொண்டு வந்து அளந்து தந்தனர். தென்னவன் தந்தவை எனச் சாற்றினர். அவற்றைப் பெற்றதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/156&oldid=936476" இலிருந்து மீள்விக்கப்பட்டது