பக்கம்:சிலம்பின் கதை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

சிலம்பின் கதை



பெயர்வது; இளமை அதுவும் மாறுவது நிலையற்ற வாழ்க்கையில் எதுவும் நிலைத்து நிற்காது” என்ற விளக்கம் தந்தான். அடுத்து அவன் செய்யத் தகுவது எது என்று எடுத்துக் கூறத் தொடங்கினான்.

அதற்கு முன்னுரையாகத் தன் நிலை யாது என்று விளக்கினான். பரிசில் பெறுவதற்காக இதைத் தான் கூற வில்லை என்று முன்னுரை தந்தான். “நீ மற்றவர்களைப் போல் உருத் தெரியாமல் மறைவதை நான் விரும்ப வில்லை. பிறந்தவர் இறப்பது பொது நெறி; அவர்களுள் சிலர் வீடுபேறு அடைவது சிறப்பு நெறி; நீ மற்றவர்களைப் போல வாழ்ந்து முடிவதை யான் விரும்பவில்லை; வீட்டுநெறி அடைவது நீ ஈட்டும் செயலாக அமைய வேண்டும்” என்று வழிகாட்டினான்.

“வேள்வி செய்வதே வீட்டு நெறிக்கு வழி கோலுவதாகும்; வேள்வி அறிந்த மறையவர் முன் இருந்து நடத்தும் பெரு வேள்வியை நீ தொடங்க வேண்டும். அதனை இன்றே செய்தல் நன்மை பயக்கும். நாளை செய்குவம் என்று தள்ளிப் போட்டால் உறுதியாக அதை ஏற்றுச் செய்ய முடியும் என்று கூற இயலாது; நல்ல எண்ணம் செயல்படுவதற்கு முன் எமன் வந்து அழைத்துச் சென்றால் என்ன செய்வது? இதுதான் நாளை நடக்கும் என்று உறுதி செய்ய இயலாது; நாளை நடப்பதை யார் அறிய முடியும்? உலகில் அத்தகையவர் யாருமே இல்லை. வேள்விக் கிழத்தியாக வேண்மாள் உனக்குத் துணையாக விளங்க வேள்வி செய்க இருவரும் இணைந்து அறங்கள் பல செய்து வாழ்விராக! மன்னர் பிறர் வந்து உன் அடிகளைப் போற்ற நீ நீடு வாழ்க!” என்று மாடலன் அறவுரை கூறினான்.

மாடலன் உரைத்த அறக் கருத்துகள் நல் வித்துகளாக அமைந்து அவை உள்ளத்தில் பசும் பயிராக வளர்ந்து செயற்பாடு பெற்றன. நான்மறை கற்ற வேத வேள்வியரை அழைப்பித்து மாடல மறையவன் சொல்லிய முறைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/171&oldid=936491" இலிருந்து மீள்விக்கப்பட்டது