பக்கம்:சிலம்பின் கதை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துக் காதை

177



கொடியைச் சிறப்பித்துப் பாடினர்; சந்தன உரலில் பெய்து யானை தந்தம் கொண்டு வஞ்சி மகளிர் முத்துக் குற்றுவார் என்று கூறிக் கடலில் எறிந்த சேரனின் வெற்றிச் சிறப்பினைப் பாடினர். மூவரையும் ஒரு சேரப் பாடித் தமிழகத்தின் மூவேந்தரைச் சிறப்பித்துப் பாடினர். நீள்நில மன்னர்கள் சேரனைத் தொழுது போற்றினர். இறுதியில் “செங்குட்டுவன் நீடுழி வாழ்க” என்று கண்ணகி வாழ்த்தினாள்.


30. வரம் தருதல்
(வரந்தரு காதை)

செங்குட்டுவன் வினவுதல்

வடதிசை மன்னர்களை வணங்கச் செய்த சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் தெய்வக் காட்சியைக் கண்டு களி மகிழ்வு கொண்டான். அதன்பின் தேவந்தியை நோக்கி மணிமேகலை பற்றிய செய்திகளைக் கூறுமாறு பணித்தான். அடித்தோழி, “மணிமேகலை துறவு பூண்டாள்” என்ற செய்தியை அவள் அரறறி வாய்விட்டுக் கூறியிருந்தாள்; அதை மனத்தில் கொண்டு சேரன் தேவந்தியை நோக்கி அவள் கூறியதாகவே கொண்டு விளக்கத்தைக் கேட்டான். அதனை அங்குள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவன் நோக்கமாக இருந்தது.

மணிமேகலை துறவு

தேவந்தி இச்செய்தியைக் கூறலுற்றாள். “மாதவி மனநிலை மாறிவிட்டது; அவள் துறவு நிலையை ஏற்று விட்டாள். அந்த நிலையில் அவள் தன் மகளைப் பற்றி என்ன கருதுகின்றாள் என்பதைத் தெரிந்து கொள்ள அவள் தாய் சித்திராபதி விரும்பினாள். பருவம் அடைந்த மங்கை உருவத்தில் கவர்ச்சி மிக்கவள் ஆயினாள். இளைஞர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/178&oldid=937566" இலிருந்து மீள்விக்கப்பட்டது