பக்கம்:சிலம்பின் கதை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரந்தரு காதை

179



அவளை ஆட்டுவித்தான். அவன் தேவந்தி மூலமாக வந்து பேசினான்.

அங்கே குழுமி இருந்தவர்களுள் அரட்டன் செட்டி என்பானின் இரட்டைப் பெண்கள் இருவரைச் சுட்டிக் காட்டினாள்; மற்றும் ஆடக மாடத்தில் அறிதுயில் அமர்ந்த திருமாலின் திருக்கோயில் அர்ச்சகன் மகள் ஒருத்தி இருந் தாள். அவளையும் தேவந்தி சுட்டிக்காட்டி இவர்கள் மீது மாடலன் கைக் கமண்டத்தில் உள்ள சுனை நீரைத் தெளித்தால் அவர்கள் தம் பண்டைப் பிறப்பு மன நிலையைப் பெறுவர் என்று அறிவித்தாள்.

அந்தச் சுனைநீர் பாசாண்டச் சாத்தன் மாடலனுக்குத் தந்திருந்தான். மங்கலா தேவியின் கோயில் அருகில் மலை உச்சியில் ஒரு சுனை உள்ளது. அதில் நீராடுவோர் பண்டைப் பிறப்பு அறிகுவர். அந்தச் சுனை நீரை மாடல மறையவனுக்குத் தந்திருந்தான். அதனை அவன் தன் கமண்டலத்தில் வைத்திருந்தான். அதனைச் சுட்டிக் காட்டி இம்மூவர் மீதும் தெளிக்குமாறு தெய்வ முற்றிருந்த தேவந்தி கூறினாள். அவள் மீது பாசாண்டச் சாத்தன் இருந்து இவ்வாறு கூற அதனை ஏற்று மாடலன் தன் கமண்டல நீரை அம்மூவர் மீதும் தெளித்தான்.

அரசனுக்கு இச்செய்தி வியப்பு அளித்தது. அவனுக்கு விளக்கம் தர மாடலன் தேவந்தியின் வரலாற்றைக் கூறினான். “மாலதி என்பவள் தன் மாற்றாள் குழவிக்குப் பால்தர அது விக்கி இறக்கச் சாத்தன் கோயில் முன் சென்று பாடு கிடப்ப அத்தெய்வச் சாத்தன் அருள் செய்தான்.”

“பாசாண்டச் சாத்தன் ஒரு குழந்தை வடிவாக அத் தாயின் முன் சென்று தவழ, அவள் அதை எடுத்துக்கொண்டு போய்ச் சேர்க்க அவன் வளர்ந்து பின் தேவந்தியை மணந்தான். எட்டு ஆண்டுகள் அவளோடு இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/180&oldid=936501" இலிருந்து மீள்விக்கப்பட்டது