பக்கம்:சிலம்பின் கதை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துணைப் பாத்திரங்கள்

207



வாழ்வில் பின் கண்டது பெண்ணின் பெருமை; அதனை மாதவியிடம் கண்டு தெளிகிறான். கண்ணகியை முழுவதும் அறிகிறான். வாழ்க்கைப் பள்ளியில் அவன் தெரிந்து கொண்ட கல்வி அது; பெண்மையை அறிவிக்க அவன் கருவியாகிறான்.

குன்றுபோல் இருந்த நிதியைத் தொலைக்கிறான்; அதற்குக் காரணம் அரிய பொருள் மொழிகளை மறந்தான் எனலாம். “இலம்பாடு நாணுத் தரும்” என்ற உணர்வை வெளிப்படுத்துகிறான். மறுபடியும் அவன் பெற்றோரிடம் பொருள் பெற்று நன்றாக வாழ்ந்து இருக்க முடியும். அவன் மான உணர்வு அவனைத் தடுக்கிறது.

தானே பொருளிட்ட வேண்டும். இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என்று நினைத்துச் செயல்படுகிறான். புற வாழ்வில் அவன் சிந்தனை போற்றத்தக்கதாக விளங்குகின்றது.


4. துணைப் பாத்திரங்கள்

காவியத் தலைமை மாந்தர்கள் கதையை இயக்கு பவர்கள் ஆகின்றனர். இவர்கள் தொடர்பு கொள்ளும் மாந்தர்கள் துணை மாந்தர்கள் என்று கூறப்படுபவர். கோவலனுக்குப் பாங்கன் என்று யாரையுமே குறிப்பிட முடியவில்லை. வறுமொழியாளர் வம்பப் பரத்தரொடு தோழமை கொண்டிருந்தான் என்று தெரிகிறது.

காதல் செய்து இவன் திருமணம் செய்து கொள்ள வில்லை. பெற்றோர்கள் முன்னிருந்து திருமணம் செய்விக் கின்றனர். அந்த வகையில் அவர்கள் துணைப் பாத்திரங்கள் ஆகின்றனர். கண்ணகியின் தந்தை மாநாய்கன்; அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/208&oldid=936530" இலிருந்து மீள்விக்கப்பட்டது