பக்கம்:சிலம்பின் கதை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

சிலம்பின் கதை



மழையைப் போல் கொடுக்கும் இயல்புடைய வள்ளல் என்று கூறப்படுகிறான் அவனுக்குக் கண்ணகி ஒரே மகள்;. அவள் குலக் கொடியாக விளங்குகிறாள். கோவலன் கண்ணகி மறைவுக்குப்பின் தானம் பல செய்து அறவாழ்வு மேற்கொள்கிறான்.

கோவலன் தந்தை செல்வம் மிக்கவன்; அரசன் மதிக்கும் பெருவாழ்வு பெற்றிருக்கிறான். பொருள் பிறருக்குத் தந்து புகழ் படைத்தவனாக விளங்குகிறான்; மாதவியோடு கோவலன் தொடர்பு கொண்டிருந்த நாட்களில் கண்ணகிக்கு அன்பு காட்டி அவள் துயரத்தில் பங்கு கொள்கிறான்; கண்ணகியின் வாயல் முறுவலுக்கு உள்ளகம் வருந்துகிறான்.

மாதவியின் தோழி வயந்த மாலை; பாசமும் நேசமும் கொண்டு பழகுகிறாள். இந்திர விழாவில் கடலாடு காதையில் அவள் யாழை நீட்டி மாதவியிடம் தருகிறாள். “அமளிமிசை வருந்துபு நின்ற வயந்தமாலை என்று அடிகள் குறிப்பிடுகின்றார்; அவள் வருந்தக் காரணம் என்ன? இருவருக்கும் உள்ள மனக்கசப்பை அறிந்தவள் என்ற குறிப்புத் தரப்படுகிறது. அவர்கள் நல்லிணக்கத்தில் அக்கரை கொண்டவள்; அதனால் அவள் வருந்துபு நின்றாள் என்று தெரிகிறது.

அடுத்து மாதவி தந்த முடங்கலை அவள் கோவலனிடம் தருகிறாள். அவன் மறுக்கிறான், அதற்கும் வருந்துகிறாள். வாடிய உள்ளத்து வசந்தமாலை என்று குறிப்பிடப்படுகிறாள். அவள் விரைந்து சென்று உரைக்கிறாள். பின்னால் வனசாரணி வயந்தமாலை வடிவில் தோன்றி அவளை மாதவி துறந்துவிட்டாள் என்று கூறுகிறாள். அவள் கதை முடிவு அதனோடு முடிகிறது என்று தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/209&oldid=936531" இலிருந்து மீள்விக்கப்பட்டது