பக்கம்:சிலம்பின் கதை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துணைப் பாத்திரங்கள்

211



“மாதவியின் கானற் பாணி கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது” என்று கூறி மாதவி கோவலன் உறவையும், மற்றைய செய்திகளையும், சோழநாடு பாண்டிய நாட்டுச் செய்திகளையும் அறிவிக்கிறான். செங்குட்டு வனால் இவன் மதிக்கப்படுகிறான். அவன் தன் எடை அளவு பொன் இவனுக்குத் தானமாகத் தருகிறான். சேரன் துலாபாரம் புகுந்து தானம் அளிக்கிறான்.

கனக விசயர்களைச் செங்குட்டுவன் சோழ நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் அனுப்பி வைக்கிறான் அவர்கள் எள்ளி உரையாடிய செய்தி கேட்டுச் சேரன் செங்குட்டுவன் கொதிப்பு அடைகிறான். அவன் சினத்தை ஆற்றுவித்து வேள்வி செய்யத் தூண்டுகிறான். இறுதியில் முன்னிருந்து வேள்வி நடத்தி வைத்து முடிக்கிறான்.

அரட்டன் செட்டி சிறுமியர் இருவர்; சேடக் குடும்பியின் மகள் ஒருத்தி, இவர்கள் மீது நீர் தெளித்துப் பழப்பிறப்பு உணர வைக்கிறான். பாசாண்டச் சாத்தன் இவனுக்கு அந்த நீரை ஏற்கனவே தந்திருக்கிறான். மாடலன் சேரன் செங்குட்டுவனை நல்வழிப்படுத்தி அவனை அற வாழ்வுக்குத் திருப்புகிறான்.

பொற்கொல்லன் துணைப் பாத்திரம் என்று கூற முடியாது அவன் எதிர்ப்பாத்திரம் ஆவான்; தீமையின் உறைவிடம், கயவன். அவன் செயற்பாடு சிறிது என்றாலும் கொடிதாக உள்ளது. தீமைக்கே அவன்தான் காரணமாக இருக்கிறான். அவன் மூட்டிய சிறு பொறி பெரு நெருப்பாகிறது.

நல்லவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் மாதரி, ஐயை இருவரும் ஆவர். மாதரியைப் பற்றிக் கவுந்தியடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/212&oldid=936534" இலிருந்து மீள்விக்கப்பட்டது