பக்கம்:சிலம்பின் கதை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சிலம்பின் கதை



செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்ப
மை இருங் கூந்தல் நெய்யணி மறப்புக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி”

என்று கூறுகிறார். இது கண்ணகியின் தனிமை நிலை.

சீறடியில் தொடங்கித் தலைமுடி வரை கூறுகிறார். இதனைப் பாதாதி கேசவருணனை என்பர். மற்றும் இதே முறைவைப்பினைக் கடலாடு காதையில் அம்ைத்திருப்பது காண முடிகிறது. மாதவி கால்விரல் தொடங்கித் தலை முடி வரை அணியும் அணிவகைகளை விவரிக்கிறார். இதிலும் இம் முறைவைப்பைக் காண முடிகிறது. இதுவும் முறை வைப்பு அணி எனக் கொள்ளலாம்.

இந்திர விழாவில் கண்ணகி கருங்கண்ணும் மாதவி செங்கண்ணும் இடம் வலம் துடித்தன என்பர். கருமை செம்மை என்பன முரண் தொடையாகும். இடம் துடித்தல் வலம் துடித்தல் இவையும் முரண் நயம் ஆகும்.

கோவலன் கொலை உண்டான்; புண்ணுமிழ் குருதி யோடு மண் மீது கிடக்கிறான் அவன்; கண்ணகி படுகளம் வந்து விடும் கண்ணிர் நம் நெஞ்சைத் தொடுகிறது.

அன்று காலையில் அவள் அவன் தலைமுடியில் இருந்த மலர்க் கொத்தைத் தன் தலையில் சூடிக் கொண்டாள். மாலை தவழும் மார்பினனாகத் திகழ்ந்தவன் மாலைப் பொழுதில் மாறுபட்டுக் காணப்படுகிறான். குருதி படிந்து அவன் மார்பினைச் சிவக்க வைத்துள்ளது. பூ இதழ் படிந்த மார்பில் குருதிக் கறை படிந்து கிடக்கிறது. இதனை அவள் சுட்டிக் காட்டுகிறாள்.

“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற்
கொண்டாள் தழிஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/217&oldid=936540" இலிருந்து மீள்விக்கப்பட்டது