பக்கம்:சிலம்பின் கதை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிநலன்கள்

217



புண்தாழ், குருதி புறம் சோர மாலைவாய்க்
கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்”

இரு வேறு காட்சிகள். காலையில் அவன் அவளைத் தழுவினாள்; மாலையில் இவள் அவனைத் தழுவுகிறாள். பூவுடன் கண்ட மார்பு பொலிவு பெற்றிருந்தது; வடுக் கொண்ட மார்பு நலிவு பெற்றுக் கிடக்கிறது. இந்த இருவேறு காட்சிகள் முரண்பாட்டைக் காட்டுகின்றன.

எல்லாம் முடிந்துவிட்டது. மதுரையை எரித்து விட்டாள். அடுத்துச் செய்வது யாது? எங்கே போவது? திக்குத் தெரியாத திடரில் அவள் நிலை குலைந்து நிற்கிறாள்.

மீண்டும் பிறந்த நாட்டுக்குச் செல்வதா? எப்படிப் போக முடியும்? கணவன் இன்றித் தனித்து எப்படிப் போக முடியும்? போய் என்ன செய்வது?

“கீழ்த்திசைவாயில் கணவனோடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு”

என்று கூறிக்கொண்டு சேரநாடு நோக்கிச் செல்கிறாள்.

இரு வேறு காட்சிகள் அவள் கண் முன் வந்து நிற்கின்றன. இம்முரண்தொடை அவள் அடைந்த அவலத்தின் எல்லையைக் காட்டுகின்றது. முரண் தொடை இங்குத் தலைமை பெற்று விளங்குகிறது.

துன்பத்தையும் இன்பத்தையும் இணைத்து வைத்துக் காட்டும்போது காவியத்தில் அவலம் மிகுதிப்படுகிறது. ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறுகள் தலைதெறிக்கக் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/218&oldid=936541" இலிருந்து மீள்விக்கப்பட்டது