பக்கம்:சிலம்பின் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்திமாலைச் சிறப்புச் செய் காதை

21



பேரரசன் இல்லாத நேரத்தில் குறும்பர்கள் வந்து நாட்டு மக்களை அலைக்கழிப்பது போல் ஞாயிறு இல்லாத நேரத்தில் இந்த மாலைப்பொழுது வந்து மக்களை வாட்டியது. நில மடந்தையை வருத்தியது.

மகளிர் நிலை

இந்த மாலைக் காலத்தில் மகளிர் நிலை யாது? கணவனை விட்டுப் பிரியாதவர்கள் களிமகிழ்வு எய்தினர். பிரிந்தவர் துன்புற்று வருந்தினர். முல்லை முகைகளில் வண்டுகள் மொய்த்து அவற்றை மலர வைத்தன; கார் காலத்தில் இந்த முல்லை மலர்ச்சியைக் கண்டு “பிரிந்தவர் வந்திலர்” என்று மகளிர் வருந்தினர். ஆயர்கள் முல்லைப் பண்ணைத் தம் குழலிசையில் தோற்றுவித்தனர்; அவ் இசை அவர்களை வருத்தியது.

மகிழ்ச்சி பொங்கும் இல்லத்தினர் தத்தம் வீடுகளில் விளக்கேற்றி வைத்தனர். இணைந்து இருந்தவர் மகிழ்வு தருவது மாலை எனக் கருதினர் மயக்கத்தைத் தருவது இது என்று பிரிந்தவர் கருதினர்.

மாதவி மகிழ்ச்சி

நிலா ஒளி வீசியது; மாலைப்பொழுது மறைந்தது. மாலைப் பொழுதாகிய குறும்பர்களைத் திங்கள் ஆகிய பேரரசன் வந்து ஓட்டியது போல நிலவு வெளிப்பாடு இருந்தது. இந்த நிலவு ஒளியில் கோவலனோடு மாதவி குலவி மகிழ்ந்தாள். மஞ்சத்தில் அவன் அவள் கொஞ்சலில் திளைத்தான். ஒப்பனைமிக்கு விளங்கி அவனுக்கு ஊடலும், கூடலும் தந்து உவகையுறச் செய்தாள்.

இவளைப் போலவே ஏனைய மகளிரும், உயிர் அனைய தம் கொழுநருடன் அவர்கள் மார்பில் ஒடுங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/22&oldid=959694" இலிருந்து மீள்விக்கப்பட்டது