பக்கம்:சிலம்பின் கதை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிநலன்கள்

221



“போர் உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங் கொடி
வாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட”

என்பார் கவிஞர்.

சொல்லாட்சிகள்

கவிஞர் ஆளும் சொற்கள் புதுப்புதுப் பொருள்களைத் தருவன; சில தொடர்கள் கவிஞனுக்கே உரியன. அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்தாள்வதில் அவர் சொல்லாட்சித் திறன் வெளிப்படுகிறது. அவற்றுள் சில பின்வருமாறு:

'கவவுக்கை நெகிழாமல் தீது அறுக' என்ற சொல் லாட்சியை மீண்டும் மாதவியை விட்டுக் கோவலன் பிரிவில் எடுத்தாளும் அழகைக் காண முடிகிறது.

'திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தவனாய்ப் போன பின்னர்' எனக் கூறுவார்.

கண்ணகியைக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்று அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் கூறுவார். அதே தொடரை மாதவிக்கு எடுத்தாளுதல் காண முடிகிறது.

“கையற்ற நெஞ்சினளாய் வையத்தினுள் புக்குத்
தன்மனை புக்காள்”

என்பர்.

“மண் தேய்த்த புகழினான்” என்று கோவலனைக் கூறும் கவிஞர் “பண் தேய்த்த மொழியினார்” என்று மகளிரைக் கூறுவது சுவை பயப்பதாக உள்ளது. 'தேய்த்த' என்ற சொல்லாட்சி நயமுடையதாக உள்ளது.

அதே போல மற்றும் ஒரு தொடரினைக் காட்ட முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/222&oldid=936545" இலிருந்து மீள்விக்கப்பட்டது