பக்கம்:சிலம்பின் கதை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சிலம்பின் கதை



“பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப”

'இழப்ப' என்பது புதுப்புதுப் பொருளில் வருதல் காண முடிகிறது.

'ஈகைவான் கொடி அன்னாள்' என்று அவளைப் பொன்னுக்கு உவமிக்கின்றார். கண்ணகியைப் பாராட்டும் போது இருமுறையும் 'பொன்னே' என்று கோவலன் மறவாமல் கூறுகின்றான். மாதரி கண்ணகியைப் பற்றிக் கூறும்போது 'பொன்னிற் பொதிந்தேன்' என்று கூறுகிறாள். தெய்வக் காட்சியில் சேரன் செங்குட்டுவன் பொன் கொடியாக அவளைக் காண்கிறான். “பொன்” என்று அறிமுகப்படுத்திய அவளை மறவாமல் அதே சொல்லில் பல இடங்களில் கூறுவது சிறப்புப் பெறுகிறது.

கண்ணகி அவள் நகைமுகம் ஒருமுறை அறிமுகப் படுத்தியவர் மறவாது அவளை அதே சொற்றொடரில் காட்டுவது அவர் தீட்டும் சித்திரம்; மறவாமல் போற்றுவது ஆகிறது.

“பேதுறவு மொழிந்தனள், அரும்பினள் நிற்ப” என்பார் கவிஞர் சாலினி கூற்றுக் கேட்டபோது.

நலங்கேழ்முறுவல் நகைமுகம் காட்டிச்
‘சிலம்புள கொள்ளும்’

என்று மகிழ்வுடன் தருகிறாள்.

காதம் நடந்து களைத்துவிட்ட நிலையில் மதுரை மூதூர் எங்கே எவ்வளவு தூரம் என்று கேட்கும்போதும் அவள் நகைமுகத்தை மறவாமல் சித்திரிக்கிறார்.

‘முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க’

என்று கூறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/223&oldid=936546" இலிருந்து மீள்விக்கப்பட்டது