பக்கம்:சிலம்பின் கதை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

சிலம்பின் கதை



நிலைத்த இன்பம் தருவது என்று வற்புறுத்திக் கூறுகிறார்; துறவின் உயர்வைக் கூறுவதற்கு அவனுக்கு விடை கூறுவதை ஒரு வாய்ப்பாகக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.

தமிழ் கற்ற புலவர் மட்டும் அல்லர் இசை அறிந்த அறிஞரும் ஆவார். இவர் இசை, நாட்டியம் இவற்றின் நுட்பங்கள் நன்கு அறிந்தவராக விளங்குவதைக் காண முடிகிறது. அரங்கேற்று காதை அது மாதவியின் அரங்கு ஏற்றம் மட்டும் கூறவில்லை. இசைக் கலையின் நுட்பங் களை விவரிக்கும் இசைநூல் என்பதைக் காட்டி விடுகிறது. நாட்டிய ஆசான், குழலோன், யாழோன், தமிழ்க் கவிஞன், தண்ணுமையோன் இவர்கள் செயல்களையும், புலமை யையும், திறனையும் விளக்கும் வகையில் அவர் நுண்மாண் கலை அறிவை நன்கு வெளிப்படுத்தித் தாம் ஒரு கலைஞர்; கலை ரசிகர் என்பதைக் காட்டி விடுகிறார். பாணர்கள் கூத்துகள் ஆடவும், பாடவும் வரும் இடங்களில் அக்கலை நுட்பங்களை எல்லாம் விடாமல் கூறுவதைக் காண முடிகிறது. இசைப்புலமை அவர் பெருஞ் சிறப்பு. அதுவே காவியத்தை உயர்த்திக் காட்டுகிறது. காவியத்தின் பெருமைக்கு இது துணை செய்கிறது.

அவர் கவிஞர் என்பது அவர் எடுத்தாளும் உவமைகள், அணிநலன்களின் தனித்தன்மை காட்டு கின்றன. மரபுகளைக் கூறினாலும் அவற்றைக் கற்பனை நயத்தோடு கூறுவது அவர் தனித்தன்மை ஆகிறது; கோவலன் கண்ணகியைப் புகழும் பாராட்டுரை இதற்குத் தக்க சான்றாக அமைகிறது. தற்குறிப்பேற்ற அணி தக்க இடத்தில் ஆளுகிறார். எதையும் முரண் நயம் தோன்றக் கூறுவதையும் காண முடிகிறது. சொல்லாட்சிகள் மறக்க முடியாதவை, 'மண் தேய்த்த புகழினான்' 'பண் தேய்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/227&oldid=936550" இலிருந்து மீள்விக்கப்பட்டது