பக்கம்:சிலம்பின் கதை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

சிலம்பின் கதை



என்ற தொடர், அதில் அவர் எடுத்தாளும் சொற்கள் அழகு ஊட்டுவன ஆகும்.

“மண் தேய்த்த புகழினான், பண் தேய்த்த மொழியினார் இங்குச் சொற்கள் சிறப்பாக ஆளப் பட்டுள்ளன.

கடுமையை உணர்த்தக் கண்ணகி வாயிற் காவல னிடம் உரைக்கும் சொற்கள் அவர் புலமைக்குத் தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

“அறிவு அறை போகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!

என்ற தொடர் வெறுப்பில் வந்த வெகுளிச் சொற்கள். அவை றகர எழுத்துத் தொடர்ந்து பெற்று ஒசை நயம் உண்டாக்குவதைக் காண முடிகிறது.

எந்தப் படைப்பும் செய்திகளால் மட்டும் நிறைவு பெறுவதில்லை. அது உணர்த்தும் அறவுரைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது: அக்காவியம் நிலைபேறு பெறுகிறது.

கண்ணகி காவியம் என்று இதற்குப் பெயர் வைத்திருக்கலாம். அது ஒரு கருத்தை மட்டும் கூறியதாக முடியும். இதில் மூன்று கருத்துகள் இடம் பெறுகின்றன. பத்தினியை உயர்ந்தோர் புகழ்வது என்பது ஒன்று மட்டும் தான் காவியச் செய்தி ஏனைய இரண்டும் அறவுரைகள் கூறும் பகுதிகள் என்று கூறலாம்.

'ஆட்சி' அது வழி தவறினால் நீதி கெட்டால், செங்கோன்மை கெட்டால் நாடு சீரழியும் என்பது அவர் உணர்த்தும் அடிப்படையான கருத்து. நாட்டு அரசியல் ஒட்டித்தான் மக்கள் நல்வாழ்வு அமைகிறது. பாண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/229&oldid=936552" இலிருந்து மீள்விக்கப்பட்டது