பக்கம்:சிலம்பின் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சிலம்பின் கதை



கழிந்தும் அவர்கள் காமம் அவிந்தவராய் அடங்கிக் கிடக்கவில்லை. இரவு நேரம் கலவிக்கு உரிய களனாக அமைந்தது; தம் துணைவர்க்குப் புலவியும் கலவியும் தந்து மகிழச் செய்தனர்.

பொழுது விடிதல்

இரவு கழிந்தது. பொழுது விடிந்தது. அன்னப் பறவைகள் பொய்கையைச் சார்ந்தன. ஆம்பல் குவிந்தது; தாமரை மலர்ந்தது; குவளைகள் கண்விழித்தன; பறவைகள் முரசம் போல் ஆர்த்தன; கோழிகள் சங்கு எனக் கூவின; வண்டுகள் இசைத்தன; இக்குரல்கள் அனைத்தும் சேர்ந்து ஊர் மக்களைத் துயில் எழச் செய்தன.

சோழன் வெண் கொற்றக்குடை நாட்டினர்க்கு நிழல் ஆகியது. பகைவர்க்கு நெருப்பு ஆகியது. அதுபோல இந்த இரவு கணவனுடன் இருந்தவர்களுக்கு மகிழ்வு தந்தது; பிரிந்தவர்களுக்கு வேதனை தந்தது.


5. இந்திர விழாவும் மாதவியும்
(இந்திர விழவு ஊர் எடுத்த காதை)

நகர்க் காட்சி

புகார் நகர் காலையில் கவின் மிக்கதாக விளங்கியது; காலை ஒளியில் அதன் மாடங்களும், கோபுரங்களும், கோயில் தலங்களும், மற்றும் உள்ள மன்றங்களும் அழகு பெற்றுத் திகழ்ந்தன.

இந்த நகர் சுருசுருப்பாக இயங்கியது; வணிகர்கள் மிக்கு வாழ்ந்தனர்; அவர்கள் குடியிருப்புப் பெருமை தேடித் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/25&oldid=959698" இலிருந்து மீள்விக்கப்பட்டது