பக்கம்:சிலம்பின் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

27


அமைத்திருந்தனர். அது பலிப் பீடிகை எனப்பட்டது. இந்திர விழா கொண்டாடும் நாளில் இங்குப் பூவும் பொங்கலும் இட்டு மறக்குடி மகளிர் வழிபாடு செய்தனர். வீரர்கள் தங்கள் தலைகளை அறுத்து வைத்துப் பலி இட்டனர். “சோழ அரசன் வெற்றி பெறுக” என்று வாழ்த்துகள் கூறினர்.

இந்தக் காவல் பூதம் அங்கு வைக்கப்பட்டதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. முசுகுந்தன் என்னும் சோழ அரசன் இந்திரனுக்கு உதவினான்; அசுரர்களை ஓட்டினான்; அவர்கள் இவனுக்குத் தீங்கு கருதி மந்திரங்கள் சொல்லி இவனை அழிக்க முயன்றனர். அந்த அசுரர்களிடமிருந்து காக்க இந்திரன் காவல் பூதத்தை அனுப்பிவைத்தான். அப்பூதம் அசுரர் செய்த வஞ்சங்களை ஒழித்துக் கட்டியது. அங்கேயே அது நிலைத்து அந்நகருக்கு அது காவல் பூதமாக அமைந்து விட்டது.

இந்த விழா சித்திரை மாதம் சித்திரை முழுநிலவு அன்று எடுக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இவ்விரு பகுதிகளினின்றும் வீரர்கள் இங்கு வந்து விழா எடுத்துப் பலியும் தந்து கொண்டனர். இது வியத்தகு காட்சியாக விளங்கியது.

சித்திர மண்டபம்

இந்திரவிழா காண வருவோர் இப்பலிப்பீடத்தைக் கண்டு வியப்பும் மகழ்வும் அடைந்தனர். இதனை அடுத்து அந்நகரில் பார்க்கத் தகுந்த காட்சியாக விளங்கியது திருமாவளவன் அமைத்த சித்திர மண்டபம். அவன் வடநாடு சென்று வெற்றி கொண்டு திரும்பி வருகையில் பேரரசர்கள் அவனுக்குத் திறைப் பொருளாக மூன்று பொருள்களைத் தந்தனர். ஒன்று ‘கொற்றப் பந்தர்’; மற்றொன்று ‘பட்டிமண்டபம்’; மற்றொன்று ‘தோரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/28&oldid=959701" இலிருந்து மீள்விக்கப்பட்டது