பக்கம்:சிலம்பின் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

31


நீர்ப்பு தேன்சிந்தி உகுகிறது. அது போல் இவள் சிவந்த கண்கள் உவந்த காரணத்தால் மகிழ்வக் கண்ணீர் சொரிந்தன.

கண்ணகி அவள் கருங்கண்கள் எந்த மாற்றமும் அடையவில்லை; தனிமையில் உழந்து தளர்ந்த நிலையில் அவள் கண்ணீர் உகுத்தாள்.

மாதவியின் வலக்கண் துடித்தது: கண்ணகியின் இடக்கண் துடித்தது. இருவர் நிலைகள் முரண்பாடு கொண்டவை; ஒருத்தி மகிழ்ச்சியில் திளைத்தாள்: மற்றொருத்தி தனிமையில் தவித்தாள். இந்த மாறுபட்ட நிலைகளில் இருவரும் மகிழ்வும் துயரமும் காட்டினர்.


6. கடற்கரை நிகழ்ச்சிகள்
(கடலாடு காதை)

வித்தியாதரன் விருப்பம்

கோயில் வழிபாடுகள் ஒருபுறம் கலை அரங்குகள் மற்றொருபுறம். புகார் நகரம் இன்ப வெள்ளத்தில் நீந்தியது. இந்த விழாவைக் காண விண்ணவரும் வந்தனர். விஞ்சையர்கள் கலை நிகழ்ச்சிகளைக் காணத் தொலைதூரம் கடந்து வந்தனர். அவர்களுள் ஒருவன் வித்தியாதர வீரன்.

அவன் தன் காதலியோடு, சோலை ஒன்றில் காம விளையாட்டில் மகிழ்வு கண்டான். அவளோடு உரையாடி இந்திர விழாவைப்பற்றி விளங்கக் கூறினான்.

“சித்திரை மாதம்,சித்திரை நாள் இன்று அந்த இந்திர விழா” என்று எடுத்துக் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/32&oldid=963696" இலிருந்து மீள்விக்கப்பட்டது