பக்கம்:சிலம்பின் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சிலம்பின் கதை


அங்குத் தாம் காண இயலும் காட்சிகளை எடுத்துக் கூறி அவளை உடன் அழைத்து வந்தான்.

இந்திரன் கட்டளையால் புகார் நகரில் தங்கிவிட்ட காவல் பூதத்துக் கோயில் முன்பு ஆண்டுக்கொருமுறை இந்திர விழா நாள் அன்று வீரர்கள் தம்மைப் பலி இட்டுக் கொள்ளும் காட்சி வியப்புடையது என்று கூறினான். “அந்தப் பலிப் பீடிகையைக்” காணலாம். வருக” என்று கூறினான்.

“மற்றும் ஐவகை மன்றங்களின் அருமை பெருமை களை நேரில் காண இயலும்” என்றான்.

“இந்திரன் அவையில் சாபம் பெற்றுப் புகாரில் பிறந்த ஊர்வசியின் மரபில் வந்த மாதவியின் ஆடலையும் காண்போம்” என்றான்.

வித்தியாதரன் வருகை

இருவரும் வெள்ளிமால் வரையில் இருந்து புறப்பட்டு இமயத்தைக் கடந்து வந்தனர். தேயங்கள் பலவற்றை அவளுக்குக் காட்டி அழைத்து வந்தான். செழுமையான கங்கை பாய்வதை அவளுக்குக் காட்டி மகிழ்வித்தான். உஞ்சைமா நகரத்தையும், விஞ்சைமா அடவியையும், வேங்கட மலையையும், காவிரிநாட்டையும் காட்டிய பின்னர்ப் பூம்புகார்க்கு அழைத்து வந்தான்; அங்கங்கே இருந்த கோயில்களைத் தொழுதவனாகி அவளுக்குக் காட்டிக் கோயில் விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் உணர்த்தினான்.

அதன்பின் அவன் பெரிதும் புகழ்ந்து பேசிய மாதவியின் ஆடல் நிகழ்ச்சியை அவளுக்குக் காட்டத் தொடங்கினான். விண்ணவரும் அங்குவந்து மறைந்திருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/33&oldid=963700" இலிருந்து மீள்விக்கப்பட்டது