பக்கம்:சிலம்பின் கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சிலம்பின் கதை



வழிக் காட்சிகள்

செல்வம் கொழித்த அந்நகரின் பெருங்கடைகள் இருந்த பீடிகைத் தெருவைக் கடந்தனர். அத்தெருவில் மங்கலத்தாசியர் தத்தம் வீடுகளில் விளக்குகள் வைத்து அழகு செய்தனர். அங்கே செல்வம் குவிந்து கிடந்தது என்பதை அவர்கள் வீடுகள் விளக்கின. மலர்தூவிய விளக்குகள், மற்றும் மாணிக்க விளக்குகள் அவர்கள் இல்லங்களை அழகு செய்தன. அவர்கள் வீடுகளை அலங்கரித்தனர். அணிகலன்கள் அசைந்து ஒலிசெய்ய அவ்வழகியர் அத்தெருக்களில் திரிந்தது காட்சிக்கு இனிமை தந்தது. செல்வச் சிறப்பால் அது திருமகள் இருக்கை என விளங்கியது. கடல்வளம் கொண்டு வந்து கடைகள் வைத்துக் குடியிருந்த அந்நிய நாட்டினர் இருப்புகளையும் அவர்கள் கடந்து சென்றனர்.

அங்கே கூலமறுகில் பண்டங்களைக் கொடிகள் எடுத்து விற்றனர். மாலைச் சேரிகள் சுருசுருப்பாக இயங்கின. அங்கே சுண்ணமும், வண்ணமும், சாந்தும், பாகும், பலகார வகைகளும் விற்போர் விளக்குகள் ஒளி விட்டன. அதனை அடுத்து ஒவ்வொரு தொழில் செய்வோரும், கடைகாணி வைத்திருப்பவரும் தனிவிளக்குகள் வைத்திருந்தனர். கள் விற்பவரும், மீன் விற்பவரும் விளக்குகள் வைத்து விற்பனை நடத்தினர். இடித்த மாவில் வெண்சிறுகடுகை வைத்தது போலக் கடற்கரை மணலில் இவ்விளக்குகள் ஒளி விட்டுக் கொண்டிருந்தன. தாமரை மலர்கள் பொய்கைகளில் பூத்து விளங்கும் மருத நிலத்தைப் போலத் தாழை மலர்கள் தழைத்து விளங்கிய அக்கடற் கரைக் கானலில் அவர்கள் சேர்ந்து தங்கினர்.

மலைபடு பொருளும், அலைபடு பொருளும் மலையெனக் குவிந்து கிடக்கும் கடல் துறைமுகம் அதுவும் மக்கள் விரும்பித் தங்கும் இடமாக இருந்தது. அத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/37&oldid=963705" இலிருந்து மீள்விக்கப்பட்டது