பக்கம்:சிலம்பின் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடலாடு காதை

37



துறைமுகப் பகுதியில் குளிர் சோலைகளில் அரசிளங் குமரரும், அவர்கள் காதலியரும் தங்கி மகிழ்ந்தனர். அவ்வாறே வணிக இளைஞரும், கணிகை மகளிரும் கலந்து உரையாடத் தனியே திரைகள் இட்டுத் தங்கி மகிழ்ந்தனர். ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும் தனித்தனியே தங்கி அவர்கள் கூடு கட்டிவாழ்பவர் போல் திரைகள் தடுத்து ஒதுங்கி இருந்தனர்; எழினிகள் அவர்களுக்குத் தனிமையைத் தந்தன.

களிமகிழ் கூட்டம் கரிகாலன் காவிரியாற்றில் புதுப் புனல் விழா எடுத்த நாளில் திரண்டிருந்ததுபோல் விளங்கிக் காட்டியது. நால்வகை வருணத்துப் பால்வகைப்பட்ட மக்கள் ஆரவாரத்துடன் காவிரி கலக்கும் சங்கமத் துறையில் குழுமி மகிழ்ந்தனர்.

அமளியில் அமர்தல்

தாழைவிரிந்த கடற்கரைச் சோலையில் வேலி அமைத்து ஒதுக்குப் புறத்தில் அங்கே ஒரு புன்னை மர நிழலில் புதுமணல் பரப்பில் ஒவியம் வரைந்த திரைச் சீலை அவர்களுக்கு மறைப்புத் தந்தது. விதானம் அமைத்த வெண்கால் கட்டிலில் மாதவியும் கோவலனும் அமர்ந்தனர். அருகிருந்த வசந்தமாலை என்னும் பெயருடைய தோழி நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்த யாழினைக் கோவலன் வாங்கினான். அவனோடு இசை பாடும் மனநிலையில் மாதவி அவனை எதிர் நோக்கி இருந்தாள்.


7. வரிப் பாடல்கள்
(கானல் வரி)

யாழ் எடுத்து இசை கூட்டி அவன் பாடுகிறான். முதலில் அவன் பாடியவை ஆற்றுவரிப் பாடல்கள்; இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/38&oldid=963706" இலிருந்து மீள்விக்கப்பட்டது