பக்கம்:சிலம்பின் கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு காண் காதை

63


பெருமை மிக்க கோவலனும் கண்ணகியும் அஞ்சி இரக்கம் கொண்டு அவர்களுக்காகப் பரிந்து பேசினர். “நெறியில் நீங்கியவர்கள் அறியாமையால் இழைத்த தவறுகள் இவை அவர்கள் பிழைத்துப் போவது தக்கது: அவர்களை மன்னிக்கவும்” என்று வேண்டினா்.

“யாண்டு ஒன்று அவர்கள் உறையூரினை அடுத்த காட்டில் உறைவர்; பின் அவர்கள் தன் பழைய உரு பெறுவர்” என்று கூறி அவர்கள் சாபத்தை மாற்றினார். அதன்பின் இவர்கள் தாம் தங்கி இருந்த சோலையை விட்டுச் சோழர் தம் தலைநகராகிய உறந்தையை அடைந்தனர். அவ் உறையூருக்குக் ‘கோழியூர்’ என்ற பெயரும் அக்காலத்தில் வழங்கியது. அதற்கு ஒரு கதை பின்னணியாக விளங்கியது. யானையை ஒரு சேவற் கோழி வென்றது என்று கூறப்படுகிறது. வீரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது; திருவரங்கத்தை அடுத்து அவர்கள் உறையூர் போய்ச் சேர்ந்தனர். அது சோழ நாட்டின் தென் எல்லையாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/64&oldid=964040" இலிருந்து மீள்விக்கப்பட்டது