பக்கம்:சிலம்பின் கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காடு காண் காதை

67


இடப் புறம்

“அவ்வழி செல்லாமல் இடப்பக்கம் சென்றால் வயல் களும் சோலைகளும் உடைய வழியைக் கடந்தால் திருமால் குன்றத்தை அடைவீர். அங்கே மயக்கம் கெடுக்கும் பில வழி ஒன்று உண்டு. இப் பில வழியில் சென்றால் புண்ணிய சரவணம், பவகாரணி இட்டசித்தி என்ற பெயர் பெற்ற மூன்று பொய்கைகளைக் காண முடியும்”.

“அவற்றுள் புண்ணிய சரவணம் ஆகிய பொய்கையில் நீராடினால் இந்திரன் எழுதிய ஐந்திரம் என்னும் இலக்கணத்தை அறிந்தவர் ஆவீர்”.

“பவகாரணி என்னும் பொய்கையில் நீராடினால் இந்தப் பிறவிக்குக் காரணமாக இருக்கும் பழம் பிறப்பைப் பற்றி அறிவீர்”.

“இட்டசித்தியில் நீராடினால் நீங்கள் கருதும் பொருள் அனைத்தும் பெறுவீர். எனவே இப்பிலத்துள் சென்று ஏதோனும் ஒன்றில் முழுக வேண்டும் என்று கருதினால் திருமால் குன்றத்தில் அங்கு விற்றிருக்கும் திருமாலை முதலில் வணங்குவீராக. அத்திருமாலைத் துதித்து விட்டு அம்மலையை மும்முறை வலம் வந்தால் அங்கே சிலம்பாற்றங் கரையில் மலர் பூத்தவேங்கை மரத்து நிழலில் ஒரு பெண் தெய்வம் வந்து தோன்றும். அத்தெய்வம் மூன்று வினாக்களைத் தொடுக்கும். இம்மைக்கு இன்பம் தருவது யாது? மறுமைக்கு இன்பம் தருவது யாது? இவ்விரண்டும் அல்லாமல் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் இன்பம் யாது? என்ற வினாக்களை எழுப்பும்; இவற்றிற்குத் தக்க விடை தந்தால் பிலத்துக்குள்ளே செல்லும் தகுதி உண்டு என்று அத்தெய்வம் உறுதி செய்யும். அவர்களுக்கு உள்ளே செல்ல வழி காட்டும்; அவள் அம்மலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/68&oldid=964044" இலிருந்து மீள்விக்கப்பட்டது