பக்கம்:சிலம்பின் கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சிலம்பின் கதை


நிலைத்து வாழ்பவள்; மலைச் செல்வி என்று அவளைக் கூறுவர்.

அவள் தகுதி உடையவர்க்கே கதவினைத் திறந்து விடுவாள். அந்நெடிய வழியே சென்றால் பல கதவுகள் இடையிடும். இறுதியில் ‘ஒட்டுக் கதவு’ ஒன்று தோன்றும். அதாவது இரண்டு கதவுகள் ஒட்டிய கதவு அது ஆகும். அதன் உள்ளே சென்றால் சித்திரம் போன்ற சீர்மை உடைய அழகி ஒருத்தி தோன்றுவாள். “அழிவு இல்லாத பேரின்பம் எது? என்பதற்கு விடை தந்தால் உதவுவேன்” என்று கூறுவாள். தக்கவிடை தராவிட்டாலும் அவர்களுக்கு எத்தகைய துன்பமும் விளைவிக்கமாட்டாள். நெடு வழிமட்டும் காட்டுவாள்; விடை தருவாரை அந்த மூன்று பொய்கைகளையும் காட்டி அங்கே அவர்களைக் கொண்டு விடுவாள். அவள் திரும்பிவிடுவாள். பஞ்சாட்சர மந்திரத்தையும், அஷ்டாட்சர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு விரும்பிய பொய்கையில் முழுகினால் விரும்பிய பேறுகள் கிடைக்கும். கண் கூடாகக் கண்ட அனுபவம் இது; நம்பிச் செல்லலாம்” என்றான்.

“இவற்றின் பயனைக் கருதாமலும் செல்லலாம்; திருமாலை நினைத்து வழிபட்டால் அவன் கருடக் கொடியுடைய தூண் தோன்றும். அதை வழிபட்டு இத்திருமால் திருஅருள் பெற்று அதன் பின் எளிதில் மதுரை அடையலாம்” என்றான். “இது பில வழி” என்று கூறி விளக்கினான்.

இடைப் பட்ட வழி

“அந்நெறி படர விருப்பம் இல்லை என்றால் இடையது செம்மையான நெறியாகும். சோலைகள் மிக்க ஊர்கள் இடையிட்டு வரும் காடுகள் பல கடந்தால் அரிய வழி ஒன்று அகப்படும். அங்கே வருத்தும் தெய்வம் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/69&oldid=964045" இலிருந்து மீள்விக்கப்பட்டது