பக்கம்:சிலம்பின் கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சிலம்பின் கதை


குடிக்க நீர் கொணர ஒரு பொய்கைக் கரையைக் கோவலன் அடைந்தான். அதன் துறையில் நின்றபோது தெய்வம் ஒன்று அவனைச் சந்தித்தது; மாதவிபால் அவன் நேயம் கொண்டவன். அவன் விரும்பும் வண்ணம் வயந்த மாலை வடிவில் அவன் முன் சென்றது. கொடி நடுக்குற்றது போல் அவன் அடியில் விழுந்து ஆங்குக் கண்ணீர் உகுத்தாள். சோகக் கதையைச் சொகுசாகக் கூறினாள். “மாதவி எழுதிய வாசகம் தவறாக உன்னிடம் யான் திரித்து உணர்த்திவிட்டேன். அதனால்தான் நீ கொடுமை செய்து விட்டாய் என்று கூறிக் கடிந்து என்னை மாதவி அனுப்பிவிட்டாள்; அவளும் கணிகை வாழ்க்கையைக் கைவிட்டு என்னையும் வெளியேற்றி விட்டாள். அதனால் மதுரை செல்லும் வணிகக் கூட்டத்தோடு வழி அறிந்து உன்னை வந்து அடைந்தேன்” என்று கூறி நீலிக் கண்ணீர் வடித்தாள்.

அவள் கூற்றை அவன் நம்பவில்லை; மாங்காட்டு மறையவன், “மயக்கும் தெய்வம் வழியில் தடுக்கும்” என்று கூறியது நினைவுக்கு வந்தது; உடனே பாய் கலைப்பாவை மந்திரம் சொல்லி அவளை அச்சுறுத்தினான்.

அவன் தெய்வ மந்திரத்துக்கு அஞ்சி அவள் உய்யும் வழி நாடி, “வனசாரணி யான்; உன்னை மயக்கம் செய்தேன்; இச்செய்தியைப் புனமயில் சாயலாள் கண்ணகிக்கும், புண்ணிய முதல்வியாகிய கவுந்தி அடிகட்கும் உரையாமல் ஏகுக” என்று வேண்டிக் கொண்டாள். அத்தெய்வம் அவனை விட்டு அகன்றது.

அவன் தாமரை இலையில் தண்ணீர் ஏந்தி அயர்வுறு மடந்தை கண்ணகியின் அருந்துயர் தீர்த்தான்.

அந்தக் கடும் வெய்யிலில் பகற்பொழுது செல்வது அரிது என்று கருதி அங்குப் பல்வகை மரங்கள் செறிந்த ஐயை கோட்டத்தில் ஒரு புறம் அடைந்தனர். வழிப்பறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/71&oldid=964163" இலிருந்து மீள்விக்கப்பட்டது