பக்கம்:சிலம்பின் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சிலம்பின் கதை


வளைந்த கொம்பினைப் பிடுங்கிப் பிறைச்சந்திரன் எனச் சூட்டினர்; புலிப்பல்லைக் கோத்துத் தாலி என அணிவித்தனர். புலித்தோலை மேகலையாக உடுத்திக் கரிய நிறத்து வில் ஒன்றினை அவள் கையில் தந்து கலைமான் மீது அமர்வித்தனர். பறவையும், கிளியும், காட்டுக் கோழியும், நீல நிறமயிலும், பந்தும், கழங்கும் தந்து ஏத்தித் துதித்தனர். சுண்ணப் பொடியும், குளிர் சந்தனமும், அவரையும், துவரையும், எள்ளுருண்டையும், கொழுப்புக் கலந்த சோறும், பூவும், புகையும் மற்றும் மணப் பொருள்களும் ஏவல் செய்யும் வேட்டுவப் பெண்கள் ஏந்தி வரச் செய்தனர். வழிப்பறி செய்யுங்கால் கொட்டும் பறையும், சூறையாடும் போது ஊதி ஒலிக்கும் சின்னமும், கொம்பும், குழலும், பெருமை மிக்க மணியும் அனைத்தும் இயைய ஒலிக்கச் செய்தனர். அக்கொற்றவை வடிவில் குமரிப் பெண்ணை முன்னால் நிறுத்தி வைத்து பலிப் பீடிகை முன் நின்று மானை ஊர்தியாகக் கொண்ட கோயில் தெய்வமாகிய கொற்றவையை வணங்கிக் கைதொழுது ஏத்தினர்.

அப்பொழுது காலடி நோவக் கணவனோடு இருந்த மணம் மிக்க கூந்தலை உடைய கண்ணகியை நோக்கிச் சாலினியாகிய முதுமகள் தொடர்ந்து தெய்வம் உற்றுப் பாராட்டிப் பேசினாள். “இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி, தென் தமிழ்ப் பாவை பெற்ற தவச் செல்வி: உலகுக்கே ஒளிதரும் ஒப்பற்ற மணிவிளக்கு ஆவாள்” என்று தெய்வமுற்று உரைத்தாள்.

“இம்மூதாட்டி பேதைமை பேசினாள்” என்று கூறியவளாய்க் கணவனின் முதுகுபுறத்தில் ஒதுங்கி நின்றாள். அரும்பிய முரலில் புதுமையைத் தந்தாள். குமரிக் கோலத்தில் இருந்த கொற்றவையை அவ்வேடுவர்கள் பல பெயர்களைச் சொல்லித் துதித்தனர். பிறை சூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/73&oldid=964165" இலிருந்து மீள்விக்கப்பட்டது