பக்கம்:சிலம்பின் கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சிலம்பின் கதை


இயலாது; பரல் வெங்கானத்தில் அவள் சீறடி படியாது. இரவில் செல்வதே தக்கது” என்று விளக்கிக் கூறினான்.

“மேலும் பாண்டிய நாட்டில் கரடி ஏதும் இடர் செய்யாது; அவை புற்றுகளைத் தோண்டா. புலியும் மான் வேட்டை ஆடாது. பாம்பும், சூர்த் தெய்வமும், முதலையும் தம்மைச் சார்ந்தவரை வருத்துதல் செய்யா. செங்கோன்மை கெடாத சீர்மையுடைய பாண்டியர் காக்கும் நாடு என்று எங்கும் பரவிய புகழோ பெரிது; பகலில் செல்வதை விடப் பல்லுயிர்க்கு ஆதரவாக நிலவு வீசும் இரவிடைச் செல்வது ஏதம் தராது” என்று அவன் தெரிவித்தான்; அதற்கு அவ்வடிகளாரும் இசைவு தந்தனர். கொடுங்கோலின் கீழ்வாழும் குடிகள் அவன் வீழ்ச்சியை எதிர்பார்ப்பது போலக் கதிரவன் சாய்வினை அவர்கள் எதிர்பார்த்தனர்.

நிலவு வெளிப்பட்டது. பார்மகளும் கண்ணகிக்காக இரங்கிப் பெருமூச்சு விட்டாள். மீன்கள் தன்னைச் சூழந்து வர நிலா தண்ணொளி வீசியது.

நட்சத்திரம் கோத்தது போன்ற முத்துவடம், சந்தனக் குழம்பு இவற்றைக் கண்ணகி அணியும் நிலையில் இல்லை. கழுநீர்ப் பூ கூந்தலில் அவள் அணிந்திலள். தளிர் மாலையோடு பூந்தழைகளும் அவள் மேனியை அழகு செய்தில. தென்றல் வீசுகிறது. நிலவு தன் கதிர்களை அள்ளிப் பொழிகிறது. எனினும் அது அவளுக்கு இன்பம் சேர்க்கவில்லை. அவள் மனநிலை அதற்கு இசைவு தரவில்லை. அவள்நிலை கண்டு பூமி வருந்தியது. மண்மகள் பெருமூச்சு விட்டு அடங்கினாள்.

அதன் பின்னர் வழியிடை நடந்து வருந்தும் மாது ஆகிய கண்ணகியை நோக்கி, “புலி உறுமும், ஆந்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/79&oldid=964870" இலிருந்து மீள்விக்கப்பட்டது