பக்கம்:சிலம்பின் கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சிலம்பின் கதை



தேவர்கள் விரும்பித் தங்கும் நகர் அது என்று மதித்து அதனை வலம் செல்வது நலம் தரும் எனக் காவற்காடுகள் சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர். மதிற்புறத்தே நடந்தனர். அந்த அகழியில் குவளையும், ஆம்பலும், தாமரையும் இவர்கள் துயரத்தை அறிந்தன போல் கண்ணிர் வீட்டன. கள் ஆகிய தேனைச் சொரிந்தன; அது கண்ணிர் எனப்பட்டது. அதன் தாள்கள் நடுங்கின; வண்டுகள் இனைந்து வருந்துவன போல் பண் அமைவு கொண்டு ஒலி செய்து இரக்கம் காட்டின.

பகைவரை வெற்றி கொண்டதன் அறிகுறியாக எடுத்த மதில் கொடிகள் வராதே” என்று தடுப்பன போல் மறித்துக் கை காட்டின. பல்வகைச் சோலைகள் மிடைந்த மதிலின் வெளிப்புறப் பகுதியை அடைந்தனர். அங்குத் துறவிகள் மட்டும் தங்கும் உரிமை பெற்றிருந்தனர்.

அந்தப் புறஞ்சேரியில் அவர்கள் தங்கினர். சிறிது நேரமே அங்குத் தங்க அவர்கள் இயலும்; இருள் வரும் வரை அங்கே அவர்கள் தங்க நேர்ந்தது.


14. ஊரைச் சுற்றிவருதல்
(ஊர் காண் காதை)

பொழுது விடிந்தது. அவர்கள் தங்கி இருந்த சோலைகளிலும், அடுத்து இருந்த நீர்ப்பண்ணைகளிலும், கதிர்முற்றி வளைந்து இருந்த கழனிகளிலும் பறவைகள் துயில் நீங்கி ஒலிப்புச் செய்தன. பொய்கையில் உள்ள தாமரைகள் கதிரவன் ஒளிபட்டுத் தம் இதழ்கள் விரித்தன; ஊர்மக்கள் துயில் எழுந்து சுருசுருப்பாக இயங்கினர்.

கோயில்களில் முரசங்கள் ஒலித்தன; சிவன் திருக் கோயில், கருடக் கொடியை உயர்த்தியவன் ஆகிய திருமால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/85&oldid=936398" இலிருந்து மீள்விக்கப்பட்டது