பக்கம்:சிலம்பின் கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் காண் காதை

89



முன்பனிக் காலம்

அடுத்தது முன்பணிக் காலம்; வளமான மனை; இளநிலா முற்றம். இளவெயில் நுகர மகளிரும் மைந்தரும் அங்குச் சென்று தங்குவர். சூரியன் தெற்குப் பக்கம் இயங்கும் காலம் அது; வெண்மேகங்கள் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாகக் காட்சி அளித்தது; இளவெயில் அவர்கள் உள்ளத்தை மகிழச் செய்தது. அத்தகைய சிறப்பு உடையது முன்பணிக்காலம்; அதனை அவர்கள் நினைவு கூர் கின்றனர்.

பின்பணிக் காலம்

அடுத்தது பின்பணிக் காலம்; கடலில் நீர்க்கலத்தில் தொண்டி நாட்டினர் கொண்டு வந்து சேர்த்தவை அகில், பட்டுத்துணி, சந்தனம். வாசம், கருப்பூரம் முதலியவை; இவற்றின் வாசத்தைக் கீழ்க் காற்று சுமந்து வரும் காலம் இது; இப்பருவத்தில் மன்மதனுக்கு விழாச் செய்து மக்கள் மகிழ்வு கொண்டனர். பங்குனி மாதம் இப் பருவத்தின் பணி மிக்க காலம் ஆகும். அத்தகைய சிறப்பு மிக்கது பின்பணிக்காலம். அதனை நினைத்துப் பார்க்கின்றனர்,

இளவேனிற் காலம்

இளவேனிற் காலம்; இதில் மாதவிக்கொடி படர்கிறது. சோலைகளிலும் காடுகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. பொதிகைத் தென்றல் மதுரையுள் புகுந்து காதலரை மகிழ்விக்கிறது. அத்தகைய இளவேனில் கழிந்து விட்டது. அதை நினைத்து ஏங்கியவராய்க் காணப்பட்டனர்.

முதுவேனிற் காலம்

அடுத்தது முதுவேனிற்காலம், இதனைக் கோடைக் காலம் என்றும் கூறுவர். வெய்யிலின் கொடுமைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/90&oldid=936403" இலிருந்து மீள்விக்கப்பட்டது