பக்கம்:சிலம்பின் கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சிலம்பின் கதை



தவசிகள் அவசியத்துக்காக இங்கு வந்து தெய்வதரிசனம் கண்டு செல்வர்: முகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் நகைப்பதம் பார்க்கும் இளைஞர்கள் இங்கு வந்து பதநிச பாடுவர்; காம விருந்து அறியாத கற்றுக் குட்டிகள் இங்கு வந்து முட்டிப்பார்ப்பர் பால பாடத்தை இங்கே வந்து படித்துச் சென்றனர்.

இந்த இச்சைக்காரர்கள் எல்லாம் இங்கு வந்து நாளும் நச்சித் தங்கி இன்துயில் பெற்றனர். பண்ணைப்பழித்த இன்சொல் பாவையர் எண்ணெண்கலையோர் இருந்த இரண்டு பெரிய வீதிகளையும் அவன் கண்டான்.

அடுத்து அவன் கண்டது அரசர்களும் விழைந்து செல்லும் கடை வீதி ஆகும். அங்கே கிடைக்காத பொருள்களே இருக்க முடியாது. மூடுவண்டிகள், வண்டிச்சக்கரங்கள், தேர்மொட்டுகள், மெய்புகுகவசம், மணிகள் பதித்த அங்குசம், தோலால் செய்யப்பட்ட அரணம், யோகத் - வளைதடி, கவரி, பல்வகைப்படங்கள், குத்துக்கோல், செம்பு வெண்கலப் பாத்திரங்கள், புதுப் புதுச் சரங்கள், மாலைவகைகள், வாள் வகைகள், தந்தக் கடைச்சல்கள், புகைவகைகள், மயிர்ச்சாந்துகள், பூமாலைகள், மற்றும் பெயர் விவரித்துக் கூற முடியாத பல பொருள்கள் இங்கு விற்கப்பட்டன. அரசர்கள் தம் தேவைக்குத் தேடி வந்த அங்காடித் தெரு இது, அதனைக் கண்டான்.

ஒளிபடைத்த வயிரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், நீலம், கோமேதகம், வைடுரியம், முத்து, பவளம் ஆகிய நவமணிகள் தனியே விற்கப்பட்டன. அந்த நவமணிக் கடைவிதியைக் கண்டான்.

அடுத்து அவன் கண்டது பொன் நகைக் கடை வீதியாகும். சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/93&oldid=936406" இலிருந்து மீள்விக்கப்பட்டது