பக்கம்:சிலம்பின் கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சிலம்பின் கதை



தெய்வம் அவன் மதித்த குலதெய்வமாக அமைந்தது; அந்நிகழ்ச்சியை மாடலன் விவரித்தான்.

பெயரிடுதலைத் தொடர்ந்து தானம் செய்ய முற்பட்ட போது நரைமுதுயாக்கை உடைய மறையவன் ஒருவன் தண்டு கால் ஊன்றி நடந்து வந்தான். பாகனைத் தூக்கி எறிந்து விட்டு வேகமாக வந்த யானை ஒன்று இந்த முதியவனைத் துதிக்கையில் கொண்டு துயரத்தில் ஆழ்த்தியது.

உயிருக்குப் போராடிய உயர்ந்தோனைக் காப்பாற்றத் தன் உயிரைப் பொருட்படுத்தாது கோவலன் அதன் கையகத்தில் பாய்ந்து அவனை மீட்டான். அவ் யானையின் பிடரியில் இருந்து விஞ்சையன் என விளங்கினான். அவனைக் “கருணை மறவன்” என்று அருகில் இருந்தவர்கள் பாராட்டினர்.

மற்றொரு நிகழ்ச்சி. படுத்துக் கிடந்த குழந்தையை அடுத்துக் கடிக்கவந்த பாம்பினைக் கொன்று வீழ்த்திய கீரிப்பிள்ளை அதன் வாயில் செங்குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்து விட்டது என்று தவறாகக் கருதி அதனை அடித்தாள் ஒருத்தி; அது துடித்துச் செத்தது.

பாவச் செயல் செய்த அவளைக் கணவன் மன்னிக் காமல் அது தீரும் வரை அவளைச் சேர்வது இல்லை என்று ஊரைவிட்டு நீங்கினான். பாவம்தீரப் பவித்திரம் செய்ய அவனுக்குப் பொருள் தேவைப்பட்டது. வடமொழியில் எழுதிய வாசகம் ஒன்று: “கருமம் தொலைத்துப் பலன் அடைவீர்” என்று எழுதித் தந்தான்.

ஏட்டை நீட்டினாள்; காசு கொடுத்து மாசு நீக்க யாரும் முன் வரவில்லை. கேட்டனன் கோவலன்; பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/97&oldid=936410" இலிருந்து மீள்விக்கப்பட்டது