பக்கம்:சிலம்புநெறி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 _ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

னாகப் பெருவிருப்புடையவனாகக் கோவலன் விளங்கி னான்; மாதவியின்பால் உள்ள ஈடுபாட்டினால் கண்ணகியை மறந்தான்்; மனை யறத்தை மறந்தான்்; மாதவியின் வீட்டிலேயே வாழ்பவனாயினான்.

மாதவி கோவலனின் மனம் மகிழ்ந்து அமைவதற்கு ஏற்றவாறு கோவலனைக் காதலனாகக் கொண்டு அவனை வாழ்வித்தாள். காதல் வாழ்க்கை சிறப்புற அமைதற்கேற்றவாறு கோவலனுக்குக் கல்வியும் புலவி யும் ஒருங்கேயளித்து இன்புறுத்தினாள். மாதவி இத் துறையில் கோவலனுக்கு விருந்தாக அமைந்தாள்.

கோவலனை பேணி வளர்த்த மாதவி

தலைமகனுக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை நலம் சிறப்புற அமையின் அத்தலைமகன் குறைகளினின்றும் விடுதலை பெறுவான்.

ஒரு கல்லை அருச்சகர் உபாசித்து அருச்சிப்பதன் மூலம் கடவுளாக்குவதைப்போல, ஒரு பெண் தன்னுடைய கணவன் எவ்வளவு குற்றங்குறைகளுடையவனாக இருந் தாலும், அவள் மட்டும் சிறந்த அன்பும் செயல் திறனும் உடையவளாக இருப்பின், தன் கணவனைச் சிறப்புடைய

தலைமகனாக விளக்கமுறச் செய்ய முடியும்.

காதல் வாழ்க்கையென்பது களிப்புக்குரியது மட்டு மன்று; ஆக்கத்தின் வழிப்பட்டது; கடமைகளின் வழிப் பட்டது. -

மாதவி, கோவலனுக்கு வாய்த்த நல் துணைவி. கோவலன் மாதவியைச் சாரும்பொழுது குற்றங்கள் உடையவனாக இருந்தான்். தென்றல் பல மலர்களை நுகர்ந்து வருவதைப்போல் கோவலன் சுற்றித் திரிந் தான்் என்று இளங்கோவடிகள் கூறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/102&oldid=702765" இலிருந்து மீள்விக்கப்பட்டது