பக்கம்:சிலம்புநெறி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி (-) 101

மாதவியை அடைதற்குரிய மாலையைக் கோவலன். வாங்கிய இடமே நகர நம்பியர் திரிதரும் தெருவாகும். யாதொரு குறிக்கோளுமின்றிக் காரணமின்றி நகரைச் சுற்றித் திரிகின்றவர்கள் திரியும் தெரு, அது. அத்தகு நகர நம்பியருள் கோவலனும் இருந்தான்். அது. மட்டுமா? -

உணவுக்கு உழைக்காமல் ஊரார் உழைப்பில் உண்டு கொழுத்துத் திரியும் இத்தகு நகர நம்பியர்கள் கூடிக் கூடிப் பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்குவர்; பேச்சினு டே, தாங்களாகவே நெடிய சிரிப்புச்சிரித்துக் கொள்வர்; பரத்தமை கொண் டொழுகுவர். இதனை இளங்கோவடிகள்,

'வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி கெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக் கொன் றேற்கும் நன்னெறி புண்டோ'

(கொலைக்களக்காதை 63-66) ,

என்று, கோவலன் வாயிலாகவே கூற வைக்கிறார்.

ஓர் இளைஞன், நல்ல தலைமகனாக வளர்ந்து முன்னேற வேண்டுமாயின், உழைத்து உண்பவனாக இருக்க வேண்டும். உழைப்பில் ஆர்வம் காட்டி மகிழும் மனப்போக்கு வேண்டும். பயனற்ற சொற்களைப் பேசக். கூடாது. குறை, கோள், பொய் முதலிய தீச் சொற். களைப் போலவே பயனற்ற சொற்களும் தீமையானவை,

சிரித்தல் என்பது உதட்டில் வழியக்கூடிய ஒன்று. 'நல்லோர் சிரிப்பில் ஒலி இருக்கும். ஆனால் அந்தச் சிரிப்பொலி தோன்றி உடன் மறையும். ஓரகத்திருந்து 'ஒழுகி வாழ்வர் - - • ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/103&oldid=702766" இலிருந்து மீள்விக்கப்பட்டது