பக்கம்:சிலம்புநெறி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பிறப்பால் இத்தகைய தலைமகனாகக் கோவலன் வளர்தற்குரிய வாய்ப்பிருந்தும் நல்லூழின்மையால் அவன் நகரம் திரிதரு நம்பியர் குழாத்துள் சிக்கிக் கொண்டான். ஆனால் அவனோ, முன்னோர்களோ புரிந்த நல்வினைப் பயன்களின் காரணம் போலும் மாதவியைச் சென்றடைகின்றான்.

மாதவியைச் சென்று சேர்ந்த கோவலன் பரத்தமை ஒழுக்கத்திலிருந்து முற்றாக விடுதலைபெற மாதவியின் காதலொழுக்கம் துணை செய்திருக்கிறது.

கோவலன், பரத்தமை ஒழுக்கத்திலிருந்து விடுபட்டு விட்டான் என்று இளங்கோவடிகள் சொன்னாரில்லை. காரணம், அஃது அவனுடைய தற்சார்பான முயற்சி யன்று. ஆனால், கோவலனைப் பிரிந்து அலருக்கு ஆளாகாத மாதவி' என்று இளங்கோவடிகள் மாதவியைச் சிறப்பித்துக் கூறுவார்.

காதற் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா மாதக் கொடுங்குழை மாதவி.........”

(இந்திரவிழவூரெடுத்த காதை. 189-130)

என்று கூறுவதன் மூலம் மாதவியின் கற்பின் திறமும்; கோவலனை மாதவி நன்னெறியில் நிறுத்திய திறமும் பெறப்படுகிறது.

அது மட்டுமன்று, கோவலன் பெருவணிகக் குடும்பத் தில் தோன்றியவன். அவன் தன்னைப் பிரிந்து மீண்டும் பரத்தமை வழியில் போய்விடக்கூடாது என்று கோவலனைக் காப்பாற்றும் உணர்வில் மாதவி சிறந்து விளங்கினாள். மாதவிக்குத் தன்னை மிக அழகுற ஒப்பனை செய்து கொள்ளுவதில் இயல்பாக விருப்ப மில்லையானாலும், கோவலன் மகிழ வேண்டும் என்பதற். காகவே அவள் ஒப்பனை செய்துகொண்டாள். :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/104&oldid=702767" இலிருந்து மீள்விக்கப்பட்டது