பக்கம்:சிலம்புநெறி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 111

மாதவியை வருத்தியிருக்கிறது. கோவலனின் பிரிவுத் துன்பத்தால் மாதவி உயிரிழக்கும் சூழ்நிலை இல்லாது போவதற்குக் காரணம்,

‘மாலை வாரா ராயினும்

காலை காண்குவம் என’’

மாதவிக்கு ஒரு நம்பிக்கை யிருந்ததேயாம். அந்த நம்பிக்கையே அவளை உயிர் வாழச் செய்தது. .

நம்பிக்கை மட்டும் இருந்து பயன் என்ன? நம்பிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சி வேண்டாமா? இடை நிகழ்வுகளால் நம்பிக்கை தளர்ந்து "போகாமல் பாதுகாக்க வேண்டாமா? இவ்விரண்டு

முயற்சிகளிலும் மாதவி ஈடுபடுகிறாள்.

கோவலனை, அழகாலும், மணத்தாலும், உணர் வாலும் ஈர்த்து வயப்படுத்தும் கடிதம் எழுதுகிறாள். கடிதத்தின் தரம் நோக்கி இளங்கோவடிகள் அதனைத் "திருமுகம்' என்று சிறப்பிக்கிறார்.

திருமுகத்திற்குரிய செய்திகளை மாதவி, எளிதில் எழுதிவிடவில்லை. என்ன எழுதுவது என்பதைப் பல தடவை தனக்குத்தான்ே பேசித் தெளிந்த உணர்வில் எழுதினாள். அந்தத் திருமுகம் எத்தகைய குற்றமும் குறையும் இல்லாதிருந்ததால் மழலை' என்று இளங்கோ வடிகள் சிறப்பிக்கின்றார்.

மழலைச்சொல் என்பது உள் நோக்கமில்லாதது: தூய்மையானது; இளங்கோவடிகளின் மழலையின் விரித்துரை எழுதி' என்ற வரி மாதவியின் து.ாய்மையைப் புலப்படுத்துகிறது.

திருமுகத்தில் உலக வாழ்க்கையின் இயற்கையையும் நோக்கத்தையும் எடுத்துக் கூறுகிறாள். உயிர்கள் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/113&oldid=702776" இலிருந்து மீள்விக்கப்பட்டது