பக்கம்:சிலம்புநெறி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி (-) 113

இதனால் மாதவியின் பால் குறை இல்லை என்பது தெளிவு எனினும் கோவலனிடத்திலிருந்த தனியாக் காதலால் மாதவி மீண்டும் முயற்சி செய்கிறாள்

மாதவியின் மாண்பு

மாதவி கோவலனின் துனியை மாற்ற முடியாமையை நினைந்து வருந்துகிறாள். ஆனாலும் முயற்சியைக் கை விடவில்லை. மீண்டும் கோசிகன் என்ற ஓர் அந்தணாளனை அணுகி கோவலனுக்குத் திருமுகம் எழுதிக் கொடுத்து அனுப்புகிறாள். இத்திருமுகத்தின் வாயிலாக மாதவியின் வளர்ந்த நிலையை அறியமுடி

கிறது.

காதலர் இருவரிடையில் புலவியோ, துணியோ ஏற்பட்டு அதுமாறாது நீட்டித்தால் இருவரில் ஒருவர் தம் நிலையை வற்புறுத் தாது மற்றவர் நிலையைச் சார்ந்து ஒழுகுதல் கடமை; நாகரிகம். இப்படி ஒழுகத் தலைப் :படின் பிரிவு பகையாக மாறி வளராமல் தளிர்க்கப்படும். காலப்போக்கில் உறவும் தோன்றும்; வளரும்.

மாதவியிடத் தில் இந்தப் போக்கு கால்கொண்டு விட்டது. இரண்டாவது திருமுகத்தில் காதலி, காதல .ணுக்கு எழுதுவது போன்ற சொற்றொடர்களே அமைய வில்லை. ஒரு ஞானாசிரியர்க்கு ஒரு மாணாக்கன் எழுதுவது போல கோவலனுக்கு மாதவி எழுதிய திருமுகம் அமைந்திருந்தது.

மாதவி, கோவலனுக்கு எழுதிய திருமுகத்தை அப்படியே தன் பெற்றோருக்குக் காட்டுமாறு பணித் தான்். காதலனைப் பிரிந்து பிரிவுத் துன்பத்தால் வருந்தும் ஒரு காதலி, தன் காதலனுக்கு எழுதிய திரு முகம் மற்றவர்களும் அதிலும் சிறப்பாக பெற்றோர்களும் :படிக்கத்தக்கதாக அமைந்ததெனில் மாதவி எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/115&oldid=702778" இலிருந்து மீள்விக்கப்பட்டது