பக்கம்:சிலம்புநெறி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 115

தும் புகழுக்கு யாதொரு குற்றமும் வராது பாதுகாத்துக் கொள்க!' என்று திருமுகத்தை முடிக்கிறாள்.

இத்திருமுகத்தில் மாதவிக்குக் குடும்பப் பூசமும் நாட்டுப் பற்றும் வளர்ந்திருப்பதையும் பார்க்கிறோம். தான்் இன்புறுவதை விட கோவலனின் புகழ் சிறப்புற அமைய வேண்டுமென்ற விருப்பம் மட்டுமே இருந்த 'தென்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. -

ஒரே ஒரு இடத்தில் தனது நிலையை எண்ணி" வருந்துகிற சொற்றோடர் விழுகிறது. ஆனால், வெளிப்படையாக இல்லை. உய்த்து உணர வேண்டியா ஒன்று. . :

அதாவது 'குலப் பிறப்பாட்டியோடு இரவிடைக்.

கழிதற்கு என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம்' என்ற சொற்றொடரில் கண்ணகி குலப்பிறப்பாட்டியாக இருந்ததால் கோவலன் அழைத்துச் சென்றிருக்கிறான்; தன்னை அழைத்துச் செல்லாததற்குக் காரணம், தான்் குலப்பிறப்பாட்டியாக இல்லாததுதான்் என்றுனர் கிறாள் போலும்!

ஆனால் இத் திருமுகம் வாயிலாக மாதவி, கோவலனை மாசின்றிக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவளாக விளங்குகின்றாள். இது மாத விக் குள்ள பெருமை. - .

கோவலனும் மாதவி தீது இலள் என்று உணர் கிறான். மாதவியின் திருமுகத்தைத் தன் பெற்றோரிடம் காட்டுமாறு கோசிகன் வாயிலாகக் கொடுத்தனுப்பு கிறான்.

இங்ங்ணம் வளர்ந்த மாதவி, துறவு நிலைக்குரிய உளப்பாங்கினை அடைந்தாள். தான்்மட்டுமல்ல. தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/117&oldid=702780" இலிருந்து மீள்விக்கப்பட்டது