பக்கம்:சிலம்புநெறி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இன்றைய அரசியலில் நடுநிலைக் கொள்கை பேசப். பெறுகிறது. பாரதப் போர் நடந்தபோது கெளரவர்கள்பாண்டவர்கள் ஆகிய இரண்டு அணியினருக்கும் உணவு வழங்கிய பெருமை சேர அரசருக்கு உண்டு. இந்த நடு நிலைக் கொள்கையை, "பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை' என்று சிலம்பும் -

'வான வரம்பனை நீயோ பெரும .

அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ கிலந்தலைக் கொண்ட பொலம்பூக் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!” (புறம்-2) என்று புறநானூறும் பாராட்டுகின்றன. சேர அரசர் களைப் பற்றிய இலக்கியங்கள் சங்க காலத்திலேயே தோன்றிவிட்டன. இவற்றுள் பதிற்றுப்பத்து குறிப்பிடத் தக்கது. .

இங்ங்னம் வளர்ந்து வந்த சேரர் மரபில் நெடுஞ் சேரலாதனின் அருமை மக்களாகச் செங்குட்டுவனும் இளங்கோவும் தோன்றினர். செங்குட்டுவன் அரசுப் பணி ஏற்க வாய்ப்பாக இளங்கோ துறவியாகிறார். இளங்கோ புவியரசாகாமல் கவியரசாகிச் சிலப்பதிகாரத்தை இயற்றி யருளினார். -

செங்குட்டுவன் செஞ்சடை வானவன் அருளில் தோன்றியவன் என்று சிலம்பு பேசுகிறது. முடியுடை மூவேந்தருள்களும் சேர அரசு விழுப்பம் உடையது; ப்ாடும் புகழுடையது. நீதி வழுவாத் தன்மையுடையது. சேர மரபினர் அரசு அறந்தழி இய அரசு, போர் முனை யிலும் வீரம் விளைவிக்கும் கொற்றமுடைய அரசு. .

சேரர் பண்பு பாடப் பண்ணும் தமிழும் காத்திருந்தன. இங்ங்னம் புகழ் பூத்த சேர அரசர்களின் தலைநகர் வஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/122&oldid=702785" இலிருந்து மீள்விக்கப்பட்டது