பக்கம்:சிலம்புநெறி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 23

மகிழ்ந்தான்ல்லன் வருத்தமுறுகின்றான். இந்தச் சூழ் நிலையில் தான்் அரசாளும் பொறுப்பு இன்பச் சார் :புடையதல்ல, துன்பம் மிகுதியுடையது என்று கூறு கின்றான். -

நாட்டில் மழை வளம் குறைந்தாலும் சரி, உயிர்கள் வருத்தமுற்றாலும் சரி செங்கோல் செலுத்துவது து ன் ப மே ய ம் போற்றத் தக்கதல்ல என்பது செங்குட்டுவன் கருத்து. .

பாண்டிய நாட்டில் நடந்த நிகழ்வுகள் பற்றி - :பாண்டிய அரசனைப் பற்றி செங்குட்டுவனிடம் இகழ்வுக் குறிப்பு யாதொன்றும் தோன்றவில்லை. மாறாகப் பாண்டியன் நெடுஞ்செழியனை நினைந்து அரசுப் பொறுப்பின் கண் உள்ள துன்பத்தையே நினைவு கூர் கிறான். இதனால் செங்குட்டுவன் பிறர் இகழ்ச்சியைக் கண்டு மகிழாத பெருந்தகை என்பதும் புலப்படுகிறது.

இன்றைய நிலை தலைகீழ்த் தடுமாற்றம். இன்று அரச பதவிகள், பனம் பண்ணும் பதவிகளாகப்போயின. அதுமட்டுமா? ஆரவாரமான சுகந்தழுவிய வாழ்க்கையும் கிடைக்கிறது. இன்று நடப்பவை அரசுகள் அல்ல, பெரிய

வியாபாரக் கடைகள் . அவ்வளவுதான்், - * * *

செங்குட்டுவன் தாபதர்கள் வாயிலாக ஆரிய அரசர் கள் தமிழ் நாட்டரசர்களை இழித்துக் கூறியதைக் கேட்டுப்பொருமினான்;ஆரிய அரசர்கள் கொட்டத்தினை அடிக்கவேண்டும் என்று உறுதிபூண்கின்றான்; வஞ்சினம் மேற்கொள்கின்றான். - , ,

அதுபோது அந்த அவையிலிருந்த ஆசான் எழுந்து, "சேரர்குல மன்ன! இமய வரம்ப நின்னை இகழ்ந்தன ரல்லர்' என்று கூறினான். ஆயினும் செங்குட்டுவனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/125&oldid=702788" இலிருந்து மீள்விக்கப்பட்டது