பக்கம்:சிலம்புநெறி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 (1 த்ருகுதவதின்றக்குடி அடிகளார்

சினம் தணியவில்லை. எம்மை இகழ்ந்தால் என்ன? மற்ற தமிழ் அரசுகளைப் பழித்தால் என்ன? தமிழ் நாட்டவர் ஒரு மரபினர்' என்று இனமான உணர்வுடன் கூறுகிறான்.

தமிழருக்குத் தேவை தன்மான உணர்ச்சி. தன்மான உண்ர்ச்சி இருந்தால் மட்டும் போதாது. இனமான உணர்ச்சியும் தேவை. அதாவது தமிழர் என்ற உணர்வில் விருப்பம். தமிழர், தமிழரைப் பகைக்காது வாழ்தல். தமிழருக்கு இடையூறு_வரும்பொழுது ஒன்று திரண்டு. பாதுகாத்தல். இந்த இனமானம் தமிழருக்கு என்றும் இருந்ததில்லை. நம் தலைமுறையில் தலைவர் பெரியார் தமிழரிடையில் இனமானத்தை வளர்க்க உழைத்தார். அறிஞர் அண்ணா அவர்கள் இனமானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாவார். r

செங்குட்டுவன், தமிழ் அரசர்களைப் பழித்ததை, தன்னைப் பழித்ததாகவே கருதினான். இந்த நிலையில் செங்குட்டுவன் தன்னை மூவருள் ஒருவனாக எண்ணிக். கொள்கின்றான். வட வரை நோக்கிப் படையெடுக் கிறான். படையெடுத்தல் ஆரிய அரசர்களை வெல்லுவ தற்காக மட்டுமல்ல. பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை எழுப்ப இமயத்தில் கல் எடுத்து வரவே படை. யெடுக்க எண்ணுகிறான்.

சூளுரைத்துப் படையெடுப்பும். தொடங்கிற்று. வடபுலத்து ஆரிய அரசர்களைவென்று. வாகை சூடினான். ஆரிய அரசர்கள் போரில் புற மு. து கி ட் டோ டி. னர். அவர்கள்ை-கனக விசயர்களைப் பிடித்து அவர்கள் தலைமீது இமயக் கல்லையும் கங்கையையும் ஏற்றிக். கொண்டு வருகிறான். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/126&oldid=702789" இலிருந்து மீள்விக்கப்பட்டது