பக்கம்:சிலம்புநெறி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 0.125

ஆயினும் செங்குட்டுவன் வடபுலத்துப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிடித்த கைதிகளைச் சோழப். பேரரசுக்கும், பாண்டிய பேரரசுக்கும் கொண்டு போய் . காட்ட ஏற்பாடு செய்கிறான். சோழ, பாண்டிய அரசர்கள், தம்முடைய வெற்றியை தமிழன் வெற்றி, தங்களுடைய வெற்றி என்று எண்ணுவர் என நம்பிக் கைதிகளைக் கொண்டுபோய்க் காட்டச் சொன்னான். அதன் எதிர் விளைவுகளைச் செங்குட்டுவன் உணர்ந் தான்ில்லை. -

கைதிகளைப் பார்த்த சோழ, பாண்டிய அரசர்கள் போரில் உயிர் பிழைத்து ஓடுபவர்களைச் சிறைப்பிடித்தல் வீரமன்று என்று கூறி விடுகின்றனர். இன்று வரையில் தமிழகம்-தமிழர் நலம் காக்கும் பெருந்தகையாளர் களைக் கண்டதில்லை. இன மானம் என்பது கடுகளவு கூட இல்லை.

இமயக் கல் கொண்டு கண்ணகிக்கு-பத்தினித் தெய் வத்திற்குச் சிலை அமைக்கிறான் செங்குட்டுவன். கங்கை நீரினைத் தெளித்து வழிபாட்டுக்குரிய திருமேனியாக்கு கிறான். கண்ணகி பத்தினிக் கோயிலில் நாள்தோறும் வேள்வி முதலியன நிகழ்த்தினான்.

நாள்தோறும் வழிபாடு நடக்க தேவந்தி மூலம் ஏற்பாடு செய்தான்். கண்ணகி திருக்கோயிலை வலம் வந்து வணங்கினான். அப்போது செங்குட்டுவனுடன் ஆரிய அரசரும், குடகக் கொங் கரும், மாளவ வேந்தரும் இலங்கைக் கயவாகுவும் உடனிருந்து வணங்கினர். கண்ணகிக்குத் திருக்கோயில் எடுத்தமையால் தமிழ் நாட்டில் பத்தினி வழிபாடு தொடங்கப் பெற்றது; வளர்ந்து வருகிறது. -

செங்குட்டுவன் கண்ணகி கோட்டம் அமைத்துக் கடவுண்மங்கலம் செய்தபோது சிறைப்பட்ட ஆரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/127&oldid=702790" இலிருந்து மீள்விக்கப்பட்டது